ஆன்மிகம்ஆலோசனை

துன்பங்கள் போக்கும் துர்க்கை பாடல்கள்..!!

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வருகின்ற ராகு நேரத்தில் துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி, வழிபடும் பெண்கள் இந்த பாடல்களை துர்க்கைக்கு பாடி வழிபடுவதால், நம் துன்பங்கள் அனைத்தும் தீரும். என்பதில் சந்தேகமில்லை.

பாடல் 1

செவ்வாய்கிழமை நாள்தோறும்

மங்கையர் யாவரும் கூடிடுவோம்

சக்தியின் தீபத்தை ஏற்றிடுவோம் – நாம்

இனிமையுடன் வரம் கேட்டிடுவோம். (செவ்வாய்க்கிழமை)

பல பல மலர்களை பறித்திடும்

பலபல பூஜைகள் செய்திடுவோம்

எங்கள் சக்தியை போற்றிடுவோம் – நாம்

இனிமையுடன் வரம் கேட்டிடுவோம். (செவ்வாய்க்கிழமை)

சுந்தர வதனி மீனாட்சி

சுகுண மனோகரி காமாட்சி

விஜயம் தருவாள் விசாலாட்சி

விரைந்தே வருவாய் பராசக்தி. (செவ்வாய்க்கிழமை)

ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்

லலிதாம்பிகையே நமஸ்காரம்

புவனேஸ்வரியே நமஸ்காரம்

காமேஸ்வரியே நமஸ்காரம். (செவ்வாய்க்கிழமை)

வருவாய் வருவாய் நீயம்மா

தருவாய் நீ சுகம் எனக்கு அம்மா

அம்மா நீ என்னை கைவிடாமல்

ஆசிகள் கூறி வாழ்த்துவாயே. (செவ்வாய்க்கிழமை)

ஏகாம்பரேஸ்வரி எனை நீயே

ஏழை என்னை ஏற்றுக் கொள்வாயே

ஆதிபராசக்தி நீ அம்மா

அருளை கொடுத்து வாழ்த்துவாயே. (செவ்வாய்க்கிழமை)

எலுமிச்சை தீபத்தை ஏற்றிடுவோம்

எங்கள் சக்தியை போற்றிடுவோம்

மனதில் அமைதியை கொண்டிடுவோம்

மங்கை அவளை போற்றிடுவோம். (செவ்வாய்க்கிழமை)

மஞ்சள் ஆடை உடுத்திடுவோம்

மகிமைகள் பலவே பெற்றிடுவோம்

மனதில் அமைதியை கொண்டிடுவோம்

மங்கை அவளை போற்றிடுவோம். (செவ்வாய்க்கிழமை)

நம்மை நாமே மறந்து விடுவோம்

அவள் நாமத்தையே நாம் போற்றிடுவோம்

நம்மை அவளை அரவணைப்பால்

சத்தியம் நம்பு துணை நிற்பாள். (செவ்வாய்க்கிழமை)

கள்ளம் கபடம் இல்லாமல்

கற்பூர தீபம் ஏற்றிடுவோம்

அற்புதக் காட்சியை கண்டிடுவோம்

கவலையின்றி வாழ்ந்திடுவோம். (செவ்வாய்க்கிழமை)

பூவால் அவளை போற்றிடுவோம்

புன்னகையில் நாம் வாழ்ந்திடுவோம்

மனதால் அவளை நினைத்திடுவோம்

மகாசக்தி அவளை கண்டிடுவோம். (செவ்வாய்க்கிழமை)

பாடல் 2

ராஜேஸ்வரி அம்மா பரமேஸ்வரி

புவனேஸ்வரி அம்மா ஜெகதீஸ்வரி

ஸ்ரீசக்ர ரூபத்தில் ராஜேஸ்வரி

சிவசக்தி ரூபத்தில் பரமேஸ்வரி (2)

“ஓம்சக்தி ஓம்சக்தி ராஜேஸ்வரி

உலகாளும் மகாசக்தி ஜெகதீஸ்வரி”!

அருளாளர் நெஞ்சங்கள் சிம்மாசனம்

அறுபத்துநான்கு கலை வெண்சாமரம்

ஒரு நான்கு வேதங்கள் சங்கீர்த்தனம்

ஓங்கார நாதம் அம்மா உன் தாண்டவம்! (ராஜேஸ்வரி)

பூவுக்கும் பொட்டுக்கும் துணையானவர்

பொன்மஞ்சள் குங்குமத்தில் நிலையானவள்

சேவிக்கும் பெண்களுக்குத் தாயானவள்

திருமாங்கல்யம் என்னும் வாழ்வானவள்! (ராஜேஸ்வரி)

குளம்போல நெய்யூற்றி விளக்கேற்றுவோம்

குடும்பத்தின் பிம்பத்தில் குடியேற்றுவோம்

வளம் யாவும் தரவேண்டி மலர்தூவுவோம்

மகாராணி நீ என்று கவி பாடுவோம்! (ராஜேஸ்வரி)

தீபத்தில் குடிகொண்ட ராஜேஸ்வரி

திலகத்தில் முகம் காட்டும் ராஜேஸ்வரி

ஆபத்தில் ஓடிவரும் ராஜேஷ்வரி

அருள் செய்ய வேண்டுமம்மா நீயே கதி! (ராஜேஸ்வரி)

அம்மா என் இல்லத்தில் அடியெடுத்து வா

அழகான வெண்கொற்றக்குடை பிடித்து வா

சும்மா நீ வரலாமோ பகை முடித்து வா

துயரங்கள் யாவருக்கும் விடை கொடுத்து வா! (ராஜேஸ்வரி)

தாய் நீ மனம் வைத்தால் தங்கம் வரும் தனி வழிக்கு

துணையாக சிங்கம் வரும் சேய் வீட்டில் கல்யாண மேளம்

வரும் திருநாட்டை அரசாளும் யோகம் வரும்! (ராஜேஸ்வரி)

——————————–*————————*—————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *