கொரோனா காலத்திலும் கொடி கட்டிப் பறக்கும் ஜியோ
கொரோனா வைரஸ் நோய் வந்தாலும் ஜியோவை ஒன்றும் செய்ய முடியாது. உலகமே நோயால் விழுந்து கிடக்க நம்ம முகேஷ் அம்பானி மட்டும் ஜம்முன்னு சம்பாதிக்கிறார். இந்தியாவோட மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, அவர் 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
அவருடைய முக்கிய வெற்றிக்கு காரணம் அவர்கள் கொடுத்த வாய்ஸ் கால் டேட்டா போன்ற அனைத்தும் இலவசம் என்ற பெயரில் மக்களை இழுத்துப் போட்டனர் என்று சொல்லலாம்.
இதனால் வாடிக்கையாளர்கள் ஜியோ தாண்டாப் பெஸ்ட் என்ற நோக்கில் ஓடிவந்தனர். தற்போதும் சிறப்பாக இருக்கின்றது ஜியோ வந்ததோ இல்லையோ மற்ற நிறுவனங்களுக்கெல்லாம் மாங்கு மாங்கென்று உழைத்து வேண்டியதாயிற்று.
கடந்த 3 மாதமாகச் சொல்ல முடியாத துயரமாக உலகம் சுருண்டு கிடக்க அம்பானி அட்ராசக்கை ரேஞ்சில், நோய்குறித்து அஞ்சாமல் வியாபார மூளையைப் பயன்படுத்தினார். கடந்த 22 நாட்களில் பல கோடிகளைச் சம்பாதித்தார்.
எல்லா சூழ்நிலையிலும் ஜியோ கெத்தாகத் தெரியுமென்று சவால் விடுவது போலிருந்தது. அவருடைய வியாபார முறை ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது வரை 39 கோடி பேர் இருக்கின்றனர். ஜியோ கஸ்டமர் கேர் ஒரு மாதத்திற்கு 12 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
ஜியோ வாடிக்கையாளர்கள் 156 நிமிடங்கள் ஒரு மாதத்திற்கு பேசுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ அசைக்க முடியாத அளவில் ராட்சமாக வளர்கின்றது.
ஜியோவிடமிருந்து மற்ற நிறுவனங்கள் கற்க வேண்டும். எது வந்தாலும் உழைப்பையும் மற்ற வியாபாரத்தையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற உணர்வு வளர்த்து கொண்டிருக்கின்றது .