சென்னையில் ஊரடங்கு காலத்தில் கம்பீரமாக பணியாற்றும் ஊழியர்கள்!
சென்னையில் துப்புரவு பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அரசு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். சென்னை மாநகரத்தில் குப்பைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. தினம் துப்புரவு பணியாளர்களுக்கு இயக்கப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்களுக்கும் முகக்கவசம் தினம் ஒன்றாக கொடுக்கப்படுகின்றது. காட்டன் கையுறை மாநகராட்சி நிர்வாகம் வழங்குகின்றது.
சென்னை மாநகராட்சியில் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 50 பேர் பணிக்கு குணமாகித் திரும்பியுள்ளனர். என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களுக்கான சம்பளம் முறையாக வழங்கப்படுவதாக அரசு அறிவித்து வருகின்றது. மேலும் இவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் துப்புரவு பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அரசு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சென்னையில் பரவி வரும் இந்தக் கொரோனா தொற்றினால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இருந்தபோதிலும் தூய்மைப் பணியாளர்கள் அவர்கள் பணியை செவ்வனே செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 50 பேர் குணமாகி பணிக்கு திரும்பியுள்ளனர். இதெல்லாம் அவர்களது பணியை செய்வது சிறப்பைப் பெறுகின்றது.
உண்மையில் இவர்கள் தான் போராளிகள் ஆவார்கள். கொரோனா அதன் அதன் வீரியம் காரணமாகச் சென்னை முழுவதுமாக முடங்கிப் போயுள்ளது. இப்படி சென்னை முடங்கி இருக்கும் இந்த சூழலில் சென்னையில் சுத்தம் செய்ய தயங்காமல் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் கம்பீரமாக செயல்படுகின்றனர்.
காலையில் சீக்கிரம் வர வைக்கப்பட்டு பணி முடித்து அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கான பணிகள் கச்சிதமாக செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக சென்னை முடங்கிக் கிடக்க சென்னையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் களையும் அதனை அடுத்து சென்னையில் அயராது பணியாற்றும் காவல் துறையினரையும் பாராட்டியே ஆகவேண்டும்.
உயிரை பணையம் வைத்து ஊரை காக்கும் இவர்கள் என்றுமே சிறந்தவர்கள் என்பதை நாம் எப்போதும் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களுக்கான மரியாதையை பாராட்டுக்களும் கொடுக்கப்பட வேண்டியது நம் கடமை ஆகும். அன்றாட நமது பிரார்த்தனைகள் செய்யும்போது தூய்மை பணியாளர்களுக்கு வேண்டிக்கொள்வது சிறப்பானதாகும்