பள்ளி மாணவிகள் கர்ப்பமா! மக்கள் அதிர்ச்சி
எங்கே செல்கிறது இந்த மனித பிறவிகள்! 10-14 வயது மங்கைகள் அம்மா ஆவது சரியா! அந்தக் காலத்தில் நடக்கும் பால்ய விவாகம் கூட 15 வயதிற்கு மேல் பட்டு தான் குழந்தை பிறக்கும் என சொல்லக் கேள்வி. இப்போது இருக்கும் நிலைமை என்ன சொல்வது என்று அறியாமல் திக்குமுக்காடி இருக்கின்றனர் மனிதர்கள். ஏன் இந்த அவல நிலை!
எல்லாவற்றுக்கும் காரணம் ஒரே ஒரு சொல். மக்களே என்ன அது? என யோசிக்கத் துவங்கிய உடன் வரும் சொல் கொரோனா. ஆம் தற்போது எது நிகழ்ந்தாலும் கொரோனாவை சாடும் நிலைக்கு வந்து விட்டனர் மக்கள். யாரைக் குறை சொல்வது? ஒருவேளை கொரோனாவால் கூட இருக்கலாம்.
கொரோனாவை குற்றம் சாட்ட காரணம் அது வந்த பின் மனிதர்கள் மனிதர்களாக இல்லை. அதற்கு முன்பும் மனிதர்கள் மனிதாபிமானமற்று திரிந்தவர்கள் சிலர் தற்போது அது சிலரிலிருந்து பலராக மாறி மனிதத்தன்மை அற்று திரியும் மிருகங்களாக இருக்கின்றனர். கொரோனாவால் ஊரடங்கு இடப்பட்டு மனிதர்கள் கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களாக மாறினார்கள் எனக் கூறினாலும் தவறில்லை போன்ற நிகழ்வுகள் சம்பவிக்கின்றனர்.
கிழக்கு ஆப்பிரிக்கா
சீனாவிலிருந்து பரப்பப்பட்ட கொரோனா நோயால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் இருக்கும் பொழுது கிழக்கு ஆப்பிரிக்கா மட்டும் என்ன விதிவிலக்கா!
ஏனைய நாடுகளைப் போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் ஐந்து மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்த நிலையில் இருக்க பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மற்ற மக்களைப் போன்று மாணவச் செல்வங்களும் ஊரடங்கு என்ற பெயரில் வீட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் என்ன தவறு இருக்கிறது எல்லா நாட்டிலும் தற்போது நிகழ்கிறது தானே? என்று நீங்கள் கேள்வி எழுப்புவது என் காதை எட்டுகிறது. சம்பவம் இது அல்ல இனி தான் வருகிறது.
ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மங்கைகள் பள்ளி செல்லும் சிறு பெண்கள் கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பெண் குழந்தைகளின் வயது 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மங்கைகள் கர்ப்பமாக இருப்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.