ஆன்மிகம்ஆலோசனை

துர்க்கைக்குரிய அஷ்டக ஸ்தோத்திரம்

துர்க்கைக்கு உரிய இந்த அஷ்டகத்தை ராகு நேரத்தில் பாராயணம் செய்வதால் நமக்கு வரும் துன்பங்கள் நீங்கும்.

துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே

சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பகக்

காமினியே

ஜெயஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்

மானுறுவிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள்

சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில்

வந்தவளே

பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட

வந்தவளே

எம்குலந்தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நற்

துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்கநிவாரணி

காமாட்சி

தண தண தந்தண தவிலொலி முழங்கிட தண்மணி நீ

வருவாய்

கண கண கங்கண கதிர் ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

பண பண பம்பண பறையொலி கூவிட கண்மணி நீ

வருவாய்

ஜெய ஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக் கொடுத்த

நல்குமரியளே

சங்கடம் தீர்த்திட சமரது செய்த நற்சக்தியெனும் மாயே

ஜெய ஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

எண்ணியபடி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருள்வாய்

கண்ணொழியதனால் கருணையே காட்டிக் கவலைகள்

தீர்ப்பவளே

ஜெயஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

இடர் தரு தொல்லை இனிமேல் இல்லை யென்று நீ

சொல்லிடுவாய்

சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறி சுகமது தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழ வினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி

ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி

ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி

ஜெய ஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

வெள்ளி, செவ்வாய்  ராகு நேரத்திலும், அன்று  மாலை  விளக்கேற்றும்  போதும், அம்மாவாசை  தினங்களிலும்  இதை தொடர்ந்து பாராயணம் செய்து வழிபட வாழ்வில் அனைத்து முன்னேற்றமும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *