Jallikattu bullsசெய்திகள்தமிழகம்தேசியம்

பகீரங்கமான இந்தி திணிப்பு – மதிமுக எம்.பி துரை வைகோ கண்டனம்

ஒன்றிய பாஜக அரசு பகீரங்கமாக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக, மதிமுக எம்.பி துரை வைகோ இந்தி திணிப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்

இந்தி பேசாத இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று, அவர்களின் பிரதிநிதியாக, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு, மக்களவை சபாநாயகரான தங்களிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் speaker லோக்ஷப் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, மற்ற அனைத்தும் இந்தியில் உள்ளது

நாங்கள் இதை தான் இந்தி திணிப்பு என்று சாடுகிறோம், இந்தி திணிப்பிற்கு இது தான் சாட்சி

நாங்கள் “இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் இவ்வாறான இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்” எனவும் மேலும் இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி மொழியிலும், பிற மாநிலங்களுக்கு ஆங்கிலத்திலும் கடித பரிமாற்றும் செய்யுங்கள் என வலியுறுத்தியள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *