சென்னையில் கனமழை மாலையு வரை பெய்யும்!
சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்தல் அதிகரித்து காணப்படுகின்றது. வடகிழக்கு பருவமழை தொடக்கம் காரணமாக சென்னையில் நள்ளிரவு கனமழை தொடங்கியது. சென்னையில் மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி வாகனங்கள் தடுமாறி நின்றன.
சென்னையில் நல்லிரவில் கனமழை
சென்னையில் பெய்த கன மழை காரணமாகப் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து கடந்த மாதம்தான் மக்கள் சிறிதளவு வெளியில் நடமாட தொடங்கியிருக்கின்றனர். இந்த நேரத்தில் கனமழை செய்துகொண்டிருக்கின்றது. நேற்று பெய்த கன மழையால் அண்ணா நகர், வேளச்சேரி, எழும்பூர் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது.
வடக்கிழக்கு பருவமழை தொடக்கம்
இனி வரும் நாட்களில் மழை வருது தொடர்ந்து அதிகம் இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் தமிழ்நாட்டில் மழை என்பது பெருகும்.
மழைகாலத்தில் பாதுகாப்பு
மழை காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருந்து சுகாதாரம் பேணுதல் என்பது அவசியமாகக் கருதப்படுகிறது. கொரோனா தொற்று காலமாக இருக்கும் இந்த நேரத்தில், மழையும் அதிகரிப்பதால் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
ஆரோக்கியமான உணவு
உணவு பழக்க வழக்கத்தில் ஆரோக்கிய உணவினைத் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மழைக்காலத்தில் சுற்றுப்புறத் தூய்மை
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் கூட்டமாக நிற்பதைத் தவிர்த்தல், வெளியில் சென்று வரும்போது முகமூடி அணிதல், கைகளைச் சுத்தம் செய்து கொள்ளுதல் போன்ற அடிப்படை முறைகளைத் தொடர்ந்து மக்கள் பின்பற்றி வந்தால் நோய் தொற்றிலிருந்து எளிதில் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பண்டிகை காலம் வடக்கிழக்கு பருவமழை
பண்டிகை காலம் என்பதால் கடை வீதிகளுக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. சுற்றுப்புறத்தில் தூய்மையாக இருக்க வேண்டும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் இதற்காக முன் முன்னமே திட்டமிட்டு செயல்பட்டால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்க முடியும். மேலும் இந்தமழையானது இன்று மாலை வரை இருக்கும்.