தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வழங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியிருக்கின்றது.
தமிழ்நாட்டில் பருவமமழைக் காரணமாக அதிகரிக்கு வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை.
- மீன்வர்கள் சூறாவளிக் காற்று வீசும் சூழலை எதிர்கொள்ள வேண்டும் ஆகையால் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் மிதமான மழை இருக்கும் சென்னையில் மேகமூட்டல் அல்லது மழை இருக்கும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியிருக்கின்றது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மதுரை மாவட்டம், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும்.
சென்னையில் மிதமான மழை
சென்னையில் மிதமான மழை இருக்கும் மேலும் வங்கக்கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கின்றது.
மழைவாய்ப்பு பெருகும்
மழைக்காலம் என்பதால் அடுத்த மழையானது எதிர்ப்பார்த்தைவிட அதிகமாக பெய்யத் தொடங்கிவிட்டது மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. கொரோனா காலம் குறைந்துவரும் நிலையில் இது ஒரு சவாலாகத்தான் இருக்கும்.
சூறாவளிக்காற்று அதிகரிக்கும்
மழை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே கொரோனா காரணமாக வேலைகள் முடங்கி கிடக்கின்றது இந்த நிலையில் மழையும் அதிகரிப்பதால் அச்சத்துடந்தான் மக்கள் இருக்கின்றனர்.
வானிலைமை ஆய்வு மையம் தகவல்
வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து பருவ நிலையைக் கண்காணித்து வருகின்றது. அது உடனுக்குடன் நமக்குத் தகவல்களை வழங்கிவிடும். மக்களும் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இன்னும் முழுமையாகக் கொரோனா முடியவில்லை.