பெண்களுக்கு உதாரணமாக உற்சாகம் அளிக்கிறார் துபாய் இளம்பெண் மெட்ரோ ஸ்டேஷன் மாஸ்டர்
நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. நம்முடைய கனவுகளை அடைவதற்கு ஒரு நிலையான வழியில் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆர்வத்தை பின்பற்றுவோம் அல்லது உங்கள் லட்சியங்களை அடைவதற்காக கடினமாக உழைக்க பயப்பட வேண்டாம் என்பதற்கு உதாரணமாக அரபு அமீரக பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார் குலூட் அலி.
பெரும்பாலான நேரங்களில் பயணிகளை எதிர்கொள்வது, வாடிக்கையாளர்களை கையாள்வது, சிக்கல்களைத் தீர்ப்பது என்று ஓடியாடி வேலை செய்து வரும் இவர். துபாய் பெண்கள் கல்லூரியில் படிப்பை தொடர்வதில் ஆர்வமாக இருக்கிறார். தன்னுடைய திறமையும், பணியையும் அங்கீகரிப்பதற்கு தனக்கு வாய்ப்பை வழங்கியதற்கும் துபாய் மெட்ரோ ரயில் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த இளம் ஸ்டேஷன் மாஸ்டர் பயணிகளுக்கும் மெட்ரோ ஊழியர்களுக்கும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிலையம் திறமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். குலூட் அலி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி நிலையப் மேலாளராக பணியில் சேர்ந்த இவர் சில மாதங்களில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் இன்று தான் மிகவும் பரபரப்பான மற்றும் பெரிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றில் மேலாளராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உதவி ஸ்டேஷன் மாஸ்டராக வேலை பார்த்த போது ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருந்ததாகக் குறிப்பிட்டார். தன்னை நிரூபிக்கவும். அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றும் விரும்பியதால், தற்போது மதிப்பீட்டாளர் ஆகவும் பணிகளை தொடர்ந்து உற்சாகமாக செயல்படுவதாக பேசுகிறார்.
குலூட் அலி அல்காசிம் ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று அரபு நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் காலிஸ் டைம்ஸ் இணையதளம் சிறப்பு செய்தியை வெளியிட்டு அந்தப் பெண்ணை கௌரவப்படுத்தி உள்ளன.
உலகின் பரபரப்பு மிக்க துபாய் நகரத்தை மக்களுடன் இணைத்து வைப்பதில் இவர் பேரார்வத்துடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் நகரத்தை மக்களுடன் இணைப்பவர் மெட்ரோ ஸ்டேஷன் மாஸ்டரான இந்த இளம்பெண்.