Audioசினிமா

துருவ் விக்ரமின் வைரலாகும் புகைப்படம் சியான் 60 படத்திற்கா?

சியான் விக்ரமின் அடுத்த படம் பெயரிடாத இந்தப்படம் சியான் 60 மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது.

தந்தை மகன் இணைப்பில் வெளியாகும் இந்தப் படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்பட்டு அனிருத்தால் இசை அமைக்கப்படுகிறது.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் சியான் செபத்தின் போஸ்டரை ஷேர் செய்து அதில் ‘இயக்குனர் கார்த்திக் ராஜூ படங்களை முதல் நாள் முதல் ஷோவில் தான் பார்ப்பேன்.

அனிருத்தின் இசை அடிக்கடி கேட்கும் ஒன்று மற்றும் நடிகரான என் தந்தை விக்ரமின் பெரிய ரசிகன் இவ்வனைத்தும் ஒருங்கிணைந்து வரும் திரைப்படத்தில் நான் ஒரு பங்காக இருப்பேன் என்பது கனவாகத்தான் இருக்கிறது. அந்த கனவில் இருந்து நான் எழவில்லை எழவும் விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

தற்போது துருவ் விக்ரமின் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் குவாரண்டைன் ஸ்பெஷலா சியான் 60 ஸ்பெஷலா என்று தெரியவில்லை. தந்தையைப் போலவே மகனும் உடலைக் கொடுத்து திரைப்பட கதாபாத்திரங்களுக்கு உயிர் அளிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *