நோய்கள் பறந்து போகணுமா
நமது உடல் ஆரோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல இவை தேவைப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வலுவாக இருக்க உதவுகிறது. முருங்கை வகைகளில் ஏதாவது ஒன்றை சாப்பிடும் போது ஆரோக்கியம் மேம்படும். கீரை, பட்டை, பூ, காய் என்ற ஒவ்வொன்றும் உடலில் சத்துக்கள் சேர்வதற்கு, தேவையற்ற சத்துகளை வெளியேற்றுவதற்கு பயன்படுபவை.
- கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து அடங்கியவை.
- முருங்கை இலைச் சாற்றை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் எலும்பு வலுபெறும்.
- வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்ப்பது நலம்.
நரையை கொஞ்சம் தள்ளி வைக்க முருங்கை
வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்ப்பது நலம். இம்மரத்தில் கிடைக்கும் பிசின் மருத்துவத்தில் பயன்படுகின்றன. மரத்தின் வேர் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி உட்கொண்டு வருவதால் நரையை கொஞ்சம் தள்ளி வைக்கலாம். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவு வகை புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும், வாயு தங்கிய இடங்களுக்கும் போடும் போது விரைவில் குணமடைகின்றன. முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்பதால் கை கால் உடம்பின் வலிகள் நீங்குகிறது. சிறுநீரை பெருக்கும்.
பிரசவத்தை துரிதப்படுத்த முருங்கை
இலைகளை நெய்யில் வதக்கி உண்பதால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் ஊறும். கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து அடங்கியவை. மந்தத் தன்மையை போக்கி பிரசவத்தை துரிதப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு இது இருதயத்தை வலுப்படுத்துகிறது. சுவாசக் கோளாறை சரிசெய்து இருதய நோய்களிலிருந்து காக்கிறது.
வயிற்றுப்போக்கு கட்டுப்பட முருங்கை
முருங்கை இலைச்சாறு எலுமிச்சை சாறு கலந்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு மறையும். இளநீரும், முருங்கைச் சாறு, எலுமிச்சை சாறு, மஞ்சள் கலந்து குடிக்க காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், கண்நோய் இவற்றைப் போக்க வல்லது.
பல்வலி, தோல்வியாதிகள் நீங்குகிறது. முருங்கை இலைச் சாற்றை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் எலும்பு வலுபெறும். இரும்புச் சத்து மிக்க முருங்கைக் கீரை காய், பூ, தண்டு என ஒவ்வொரு பாகமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.