சினிமா

மம்மூட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

முஹம்மது குட்டி பனபராம்பில் இஸ்மாயில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வேற யாரும் இல்லைங்க நம்ம மம்மூட்டி தாங்க. 69-வது பிறந்த நாளைக் கொண்டாடும் மம்மூட்டி.

7 செப்டம்பர் 1951 கேரள மாநிலத்தில் கொச்சியில் பிறந்திருக்கிறார் மம்மூட்டி. 1971 தன்னுடைய இருபது வயதில் திரையுலக பயணத்தை தொடங்கி உள்ளார்.

70,80,90,2கே கிட்ஸ் என நான்கு தலைமுறையை ஆட்சி செய்யும் கதாநாயகர் மம்மூட்டி. பிரதானமாக மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகராக இருந்தாலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மற்றும் ஆங்கில மொழிகப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அனுபவங்கல் பாலிச்சகல் என்னும் மலையாளப் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பயணத்தைத் தொடங்கினார் மம்மூட்டி. எழுபதுகளில் சில படங்களில் நடித்தவர் நான்கு தசாப்தங்களில் சடசடவென்று 400 படங்கள் நடித்துள்ளார். 1980 ல் வில்கானண்டு ஸ்வப்நங்கல் படத்தில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கினார்.

மௌனம் சம்மதம் என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா நதியா என பல நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் மம்மூட்டி. தளபதி படத்தில் தேவா கதாபாத்திரம் இவரின் திரை பட்டியலில் இன்றளவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

வாழ்த்துக்கள்

பல விருதுகளையும் பாராட்டுகளையும் தன்னுடைய திரையுலக பயணத்தில் பெற்றிருக்கிறார் மம்மூட்டி. உயர்ந்த மனிதராக தன் பயணத்தை மேற்கொண்ட அவருக்கு பல மேடைகளில் பாராட்டுக்கள் குவிந்து உள்ளன. இன்று இவரின் பிறந்தநாளை ஒட்டி பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டுருக்கின்றனர்.

இவர் மம்மூகா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.சின்னக்குயில் சித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கும் வாழ்த்துக்களை கூறி இவருக்கு கடவுளின் அனுக்கிரகத்தை பிரார்த்திக்கிறார்.

பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா இவருடன் எடுத்த ஒரு புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

வெள்ளித்திரை மேடையில் இவருடன் பயணித்த முன்னணிக் கதாநாயகி நதியா ஒரு திரைப்பட விழாவில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

மலையாள திரையுலகில் தனக்கென தனித்துவமான பங்கினை கொண்டுள்ள பிரித்திவிராஜ் நான்கு சகாப்தமாக பயணிக்கும் மிகப்பெரிய நடிகரான மம்முட்டிக்கு அற்புதமான புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

View this post on Instagram

Happy birthday Mamukka! 🤗❤️ @mammootty

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

உலகமே இவரின் பிறந்தநாளை கொண்டாடும் பொழுது அவரின் வீட்டில் கொண்டாடாமல் இருப்பது சாத்தியமா! மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தன்னுடைய தந்தையை முத்தமிடுவது போல் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை உணர்வுப்பூர்வமான எழுத்துக்களுடன் பகிர்ந்துள்ளார்.

பிரேமம் படத்தின் கதாநயகன் நிவின் பாலி பயண தருணத்தில் விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

இன்றைய தினத்தின் நாயகன்! பிறந்தநாளை கொண்டாடும் மம்மூட்டி அழகி கேக்குடம் பிறந்தநாளை கொண்டாடும் வண்ணம் புகைப்படத்தை எடுத்து அந்த கேக்கை அனைவருடனும் பகிர ஆசை கொள்கிறார்‌.

மக்களே நீங்களும் உங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *