செய்திகள்தமிழகம்தேசியம்

இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளது.. டீசல் வீட்டுக்கு வீடு விநியோகம்..

வீடுகளுக்கு சென்று எரிபொருள் விநியோகம் செய்யும் தொழில் இந்தியாவில் ஒரு முக்கிய சந்தையாக மாற வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் டீசலுக்கான தேவையும் அதிகரிக்கும் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்தில் குறைந்தது 2,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டும் திட்டம் நல்ல திட்டம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

2020 நிதியாண்டில் நாட்டின் மொத்த டீசல் நுகர்வு 82.6 மில்லியன் டன்னாக இருந்தன. பெட்ரோலிய பொருட்களை தேவை மற்றும் பயன்பாடு வெகுவாக குறைந்த போதிலும் ஊரடங்கு தளர்வு தற்போது அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் தான் வீடுகளுக்கு சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அழைப்பு விடுவிக்கப்பட்டன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், போன்ற அதிவேக டீசலை வீட்டு வாசலில் வழங்க விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து வருகின்றன.

சில நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். முன்பதிவு அடிப்படையில் வீட்டுக்கு வந்து பெட்ரோல் டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது நாட்டின் சில முக்கிய நகரங்களில் மை பெட்ரோல், பெப் பியூயல் போன்ற நிறுவனங்கள் ஆர்டரின் பெயரில் பேரல் பெட்ரோல் சப்ளை செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

வீடுகளுக்கே சென்று பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என எண்ணை நிறுவனங்கள் அறிவித்து உள்ளது. இத்திட்டத்திற்கு இந்தியாவில் வரும் காலத்தில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதாக தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *