எக்ஸாம் பற்றிய கவலையை விடுங்க..!!
2015க்கு பிறகு நீண்ட நாட்கள் பள்ளி விடுமுறை அறிவிப்பது இந்த வருடமாகும். எனவே இந்த விடுமுறையை வீணாக்காமல் மாணவர்கள் பயனுள்ளதாக, பரீட்சைக்கு படிப்பதற்கு நிறைய நேரங்கள் உள்ளன. நிறைய நேரம் இருப்பதால், படித்த பாடத்தை தினமும் நன்றாக ரிவிஷன் செய்ய முடியும். நீங்கள் ஏற்கனவே படித்த பாடங்கள் எழுதிய பாடங்கள் என்பதால் இப்பொழுது ரிவிஷன் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
உங்களுடைய பழைய கொஸ்டின் பேப்பர், இம்பார்ட்டெண்ட் கொஸ்டின்ஸ், அதெல்லாம் தினமும் ஒவ்வொரு பாடமாக, உங்களால் முடிந்த நேரத்தில் படித்து எழுதிப் பாருங்கள். எக்ஸாம் பற்றிய கவலையை விடுங்கள். இந்த வருடம் அனைத்து மாணவர்களும் நல்லபடியாக தேர்வு எழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு தமிழக அரசு உங்களுக்காக வழங்கியுள்ளது.
நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற ஒவ்வொரு பாடத்திலும் முயற்சி செய்யலாம், என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து படியுங்கள். டென்ஷன் ஆகாமல், ரிலாக்சாக படித்தாலே போதுமானது. இதற்காக தினமும் காலை, மாலை, இரவு என ஒரு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டாலே போதுமானது.
ஏனென்றால் ஏற்கனவே படித்த பாடத்தை தான் திரும்ப படிக்கிறீர்கள். போதுமான நேரத்தை விட, அதிக நேரம் இருப்பதால் இதை சுலபமாக நீங்கள் செய்ய முடியும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவே இல்லை. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பதிவியல், போன்ற தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு, கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஆசிரியர் கல்வி சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளும், ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மெனக்கெடாமல் படிங்க
நீண்ட இடைவெளியில் தேர்தலை சந்திக்கப் போகும் மாணவர்கள். ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பேசப்படும் சூழலில், தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் என்ன செய்ய வேண்டும். தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும். என்பது பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம். உங்களுக்காக ஒரு கால அட்டவணை உருவாக்கிக்கொண்டு படிங்க. தேர்வு தேதி அறிவித்த பிறகு படிப்பதில் முழுமையாக கவனம் செலுத்தி, கடுமையாக அதற்கு முன்பாக நாட்களில் ரொம்பவும் மெனக்கெடாமல் படிங்க.
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு பொதிகை தொலைக்காட்சியில் நண்பகல் 11 முதல் 12 மணி வரை ஒளிபரப்பாகும், பத்தாம் வகுப்பு பாடங்கள் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு வகுப்பில் 60 பேர்கள் இருந்தால், 25 பேர் மட்டுமே, வாட்ஸ்அப் யூஸ் பண்ண முடியுது. அதனால் எல்லாராலும் வாட்ஸ்அப் குரூப்பில் டீச்சரிடம் சந்தேகங்களை கேட்க முடியாது. பாடங்களை கவனிக்க முடியாது.
மனநிலை பொறுத்து
அனைவரிடமும் ஆண்ட்ராய்டு போன் இருப்பதில்லை. செல்போன்களை சில மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த தெரியாதவர்களாகவும் இருக்கின்றனர். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக ஒரு மாணவன் பள்ளியில் 9 மணி நேரம் செலவிடுகிறார். அந்த ஒன்பது மணி நேரமும் வீட்டில் காலியாக உள்ளது. வீட்டில் இருக்கும் நேரத்தில் படிக்க முடியாது. குடும்பச் சூழல், மனநிலை பொறுத்து, தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும்.
நேரத்தை வீணடிக்காமல் மனசுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இருக்கும் நாட்களில் மாணவர்கள் உடலையும், உள்ளத்தையும், சமநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். நம்பிக்கையையும் இழந்து விடவே கூடாது. மகிழ்ச்சியாக இருக்கும் போது படிப்பது மனதில் நிற்கும். மேலும் படிப்பில் விருப்பத்துடன் ஈடுபடமுடியும்.
கூகுள் கிளாஸ் ரூம்
மெய்நிகர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மைக்ரோசாஃப்ட், கூகுள் கிளாஸ் ரூம் இணைந்து சந்தேகங்களை கேட்கலாம். பல மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட திருப்புகழ் வினாக்களை பயிற்சி செய்யலாம். கல்வி டிவி, யூட்யூப் வழி பாடங்களைக் கற்கலாம். நேரம் அதிகம் கிடைப்பதால் காலையில் ஒரு பாடமும், மாலை ஒரு பாடமும் என்று ஒரு அட்டவணையை தயாரித்து கொள்ளுங்கள். சிறு சிறு பிரிவுகளாக பிரித்து படிக்கலாம்.