Cancer treatment : இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம் அறுவை சிகிச்சை இல்லாமல் அறிய சிகிச்சை
ஆரம்ப நிலை புற்றுநோயை, அதிநவீன எண்டாஸ்கோபி உபகரணங்களின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்ற முடியும் என்று கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் மதுரா பிரசாத் சுமன் தெரிவித்தார்.
ஆரம்பநிலை புற்றுநோய்களை அதிநவீன எண்டாஸ்கோபி மூலமாக எளிதில் கண்டுபிடிக்க முடியும் என கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதுரா பிரசாத் மோகன் தெரிவித்துள்ளார்,
மேலும் இது குறித்து மருத்துவர் மதுரா பிரசாத் சுமன் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, உணவு குழாய், இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க தற்போது, அதிநவீன எண்டாஸ்கோபி உபகரணங்களின் மூலம் கன்டறிந்து அவற்றை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற முடியும் என்றார்.
மேலும், சமீபத்தில் கனடா நாட்டில், வான் கூவர் நகரில் நடந்த அமேரிக்கன் காலேஜ் ஆப் கேஸ்ட்ரோ என்டிராலஜி எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது இதில் மருத்துவர் மதுரா பிரசாத் சுமன் கலந்து கொண்டு, சிறுகுடலில் தோன்றும் ஆரம்ப நிலை புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டாஸ்கோப் மூலமாக முழுமையாக அகற்றும் வழிமுறை குறித்து மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்தார் இதனை கண்ட அனைவருமே பாராட்டி மருத்துவர் மதுரா பிரசாத்க்கு பிரசிடென்சியல் அவார்ட் மற்றும் எண்டாஸ்கோபி துறையின் அவுட்ஸ்டாண்டிங் போஸ்டர் என்ற அவார்ட் என இரு விருதுகளை வழங்கியுள்ளதாக கூறினார், இந்த இரண்டு விருதுகளையும் இன்று மருத்துவர் மதுரா பிரசாத் சுமன் விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத், மற்றும் மருத்துவர் வம்சி மூர்த்தி, மருத்துவர் சுமன் பிரசாத் ஆகியோரிடம் வழங்கினார்.