எஸ்பிபி மறைவை வைத்து கருத்துக்கள் பரப்பாதீர்கள்!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் அவரை வைத்து தேவையற்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் இறுதி நிகழ்ச்சியை நடத்திய எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்தார்.
டோக்கியோ தமிழ்ச்சங்கம்:
டோக்கியோ தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்குப் பின்பு எஸ்பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சமூக வலைத்தளத்தில் எஸ்.பி.பி மற்றும் அவர் சார்ந்த மொழி ஆகியவற்றைக் கொண்டு தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
எஸ்பிபி அவர்கள் ஒரு சகாப்தம் அவர் நித்திய நிலா இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் பாடிய பாட்டுக்கள் அந்த குரலின் கம்பீரம் காதல், அழுகை, வீரம், அன்பு, அன்னை ஆகிய பாவனைகள் குறையாது. எஸ்பிபி அனைவருக்கும் பொதுவானவர் அவர் ஒரு சகாப்தம்.
தவறான கருத்து பரப்பாதீர்கள்:
தேவையற்ற வதந்திகளை அவரின் பெயரால் செய்வது அவரது பாட்டுக்கு நாம் செய்யும் துரோகம். ஆகையால் எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டாம். தீர விசாரிக்காமல் கட்டுக்கதை கட்டுவதை நிறுத்த வேண்டும் இதுகுறித்து எஸ்பிபாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு குறித்துத் தவறாகப் பேச வேண்டாம் என மௌனராகம் முரளி கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
மேலும் படிக்க : அழியாப் புகழுடன் எஸ்பிபி சார் பெற்ற விருதுகள்.. கடைசியாக பாடி வெளியான பாடல்…
டோக்கியோ தமிழ்ச்சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் பாதுகாப்பாக நடைப்பெற்றது மௌனராகம் முரளி தெரிவித்திருக்கின்றார். எஸ்பிபி மிகப்பெரும் பாடகர், சிறந்த மனிதர் என பல்வேறு ரூபங்களை தன்னுள் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு சில தன்னலவாதிகள் அவர் ஆந்திர மாநிலத்தவர் என்றும் தமிழ் மொழிக்காரர் என்றும் பேசி வருக்கின்றார். எஸ்பிபி தமிழ் மொழி தமிழ்நாட்டை தாய் விடாகப் பாவித்தவர். அவர் இறப்புக்குப் பின்பு அவரை வைத்துப் பேசுவது அழக்கல்ல.
மேலும் படிக்க : எஸ்பிபியின் இறப்பு! பிளந்து கட்டிய மழை! ரஜினியின் இரங்கல்!