“Don’t Say Gay” மசோதா நிறைவேற்றம்..!
“Don’t Say Gay” என்ற மசோதா , கல்வியில் பெற்றோர் உரிமைகள் , அமெரிக்காவின் புளோரிடா செனட் டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா பாலியல் கல்வி தொடர்பான சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளதாக கூறப்படுவதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம், பாலியல் கல்வி மழலையர் பள்ளிகளில் கற்பிக்கக்கூடாது என்றும் வயதுக்கேற்ரவாறோ அல்லது வளர்சிக்கு ஏற்றமாறோ பாலியல் கல்வி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதனை மீறும் ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் வழக்கு தொடரவும் இந்த மசோத அனுமதிக்கவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மசோதா இறுதியில் சட்டமாக கையொப்பமிடப்பட்டால், அது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். கவர்னர் ரான் டிசாண்டிஸ், மசோதாவை ஆதரிப்பதாகக் கூறினார், இருப்பினும் அவர் தனது மேசையைத் தாண்டினால் அதில் கையெழுத்திடுவேன் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.
இந்த மசோதவிற்கு LGBTQ ஆர்வலர்களால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாலியல் தொடர்பான கல்வியை அடக்கும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.