அபாயகரமானது என்று எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
பள்ளி விடுமுறை வெளியே எங்கும் செல்ல முடியாத காரணத்தால் கொரோனா பொது முடக்கம் இவற்றினால் குழந்தைகள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். நம் செல்ல பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவது செல்போன். இவர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் வல்லமை கொண்டது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. பல மணி நேரம் உட்கார்ந்த படி செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படையும். விளையாட்டுகளில் ஈடுபடாமல் தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பல குழந்தைகள் மற்றும் கைகளில் செயல்திறனை முடக்கும்.
உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை வரவழைக்கும். ஒளிரும் திரையை பல மணி நேரம் குழந்தைகள் பார்த்து வருவதால் கண் பிரச்சனை, பார்வைத்திறன் குறைபாடு ஏற்படும். தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கி இருப்பதால் குழந்தைகளின் பேச்சுத் திறனும் பாதிக்கக்கூடும்.
பிறருடன் பழகுவது குழந்தைகளோடு இணைந்து விளையாடுவது தெரியாமல் குழந்தைகள் தனிமைப்பட்டு விடுவார்கள். செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல் போனில் அதிக நேரம் செலவிடுவதால் குழந்தைகளை மழலை பள்ளி வகுப்பில் சேரும்போது உடல் இயக்க செயல்பாட்டு பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் முடிவில் இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போனில் தினமும் 3 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக இருப்பதால் இவர்களின் உடல் வளர்ச்சியும் செயல்பாடுகளும் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. ஐந்து வயது மேல் சுறுசுறுப்பு தன்மை குறைந்து போய் விடுவதால் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பாக இவர்களது உடல் இயக்க திறனில் பாதிப்பு வெளிப்படுவதும் தெரியவந்துள்ளது.
எனவே பெற்றோர்கள் இவற்றை கவனத்தில் வைத்துக்கொண்டு குழந்தைகளை டிவி பார்ப்பதையும், செல்போனில் மூழ்கி இருப்பதையும் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். செல்போன் மூலம் குழந்தைகள் குறித்து எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் இது அபாயம் என்று தெரிவித்துள்ளனர்.