புதிய கட்சியைத் தொடங்கும் டிரம்ப்
டிரம்ப் குடியரசு கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக தகவல் வெளியானது. அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார் டிரம்ப். ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பதவி ஏற்பதற்கான விழா தீவிரமாக நடந்தன.
கடந்த நவம்பரில் 78 வயது எட்டிய ஜோ பைடன் வயதான நபராக அமெரிக்கா அதிபர் பதவியை அலங்கரித்தார். மிக வயதான நபராக, அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் குடியரசு கட்சி மற்றும் அதிபர் பதவியில் விலகி, புதிய கட்சியை தொடங்குகிறார் டிரம்ப் என்ற தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் 6ஆம் தேதி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வன்முறைகள் எழுந்தன. டிரம்புக்கு குற்றச்சாட்டு வந்தன. அத்துமீறி நுழைந்த டிரம்ப், நாடாளுமன்றத்தில் ஆதரவாளர்கள் மூலம் கலவரம் ஏற்பட்டன. சொந்தக் கட்சியான குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் டிரம்ப்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கட்சியினர் ஆதரவு தெரிவிக்காத நிலையில் இக்கட்சியில் இருந்து விலகுவதாகவும், தேசபக்தி கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே ஜனநாயக கட்சியும், குடியரசுக் கட்சியும் அமெரிக்காவில் மாறி மாறி வரும் சூழலில் புதியதாக ஒரு கட்சி தொடங்குவது முன்னிலைப்படுத்துவது, சவாலாக எதிர்பார்க்கப்படுகிறது.