தல அஜித் குமாருக்கு இன்னொரு முகமும் இருக்கு தெரியுமா?
மங்காத்தாடா மங்காத்தாடா…
நடிகர் அஜித் குமார் பல படங்கள் நடித்தாலும் தன்நிலை மாறாது அதே புன்னகையுடன் எந்தவித கெத்து காட்டாமல் திரையுலகத்தை கலக்குகிறார். முடி நரைத்தாலும் டையடிக்காமல் இவர் நடிக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டமும் குறைவதில்லை அவருக்கு உள்ள பவுசும் குறைவதில்லை. அவரைக் கண்டு பல மக்களுக்கு டை அடிக்க கொடுக்கும் காசை மிச்சப்படுத்தி உள்ளனர்.
தமிழக திரையுலகின் தல அஜித் குமார் பன்முக நாயகராக திகழ்கிறார். அஜித் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் தன் ஆசை இலட்சியத்தை விட்டுக்கொடுக்காத தனித்துவமான நபர்.
சினிமா துறையை சேர்ந்தவர் என்று உலகத்திற்கு அறிமுகமான அஜீத் கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், போட்டோகிராபி எனப் பல துறைகளில் சாதனையாளர். இந்தப் பட்டியலில் சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக 2018 யில் நியமிக்கப்பட்டார்.
தக்ஷா குழுவினரால் இயக்கப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒரு சாதனை படைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் – 2018 போட்டியில் கலந்து கொண்ட தக்ஷா குழுவினர் சர்வதேச அளவில் இரண்டாம் பிடித்து சாதித்தனர்.
அஜித் தலைமையில் இந்த குழுவின் முக்கியமான ஆராய்ச்சியான ட்ரோன் பிரபலம் வாய்ந்தது. ட்ரோன் என்றவுடன் திருப்பூர் போலீஸ் செய்த கண்காணிப்பும் அந்த வாலிப மனிதனின் எஸ்கேப் மூலையும் தான் நினைவுக்கு வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கிருமிநாசினி பணியும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்படுகிறது. நான்கு சக்கர வண்டிகளை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு வேலையை தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் செய்கிறது தக்ஷா குழு. திரைத்துறையில் இருந்தாலும் பல தொழில்களில் சிறப்பு வாய்ந்தவராக இருக்கும் அஜித் குமார் வளரும் நாட்டிற்கு தேவையான இளைஞர்களை ஊக்குவித்து செயல்பட வைக்கிறார்.
கதைகளில் வரும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகனாக திகழ்கிறார் நம்ம தல அஜித் குமார். ஹேட்ஸ் ஆப் டூ அஜித் குமார் மற்றும் தக்ஷா குழு.