இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை சிறக்க
இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை சிறக்க இந்த பொருத்தங்கள் எல்லாம் தேவைப்படுகிறது. ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். பெண் நல்ல குணம் கொண்டவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கும் இதே எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆண் நல்ல குணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. அழகோடு, குணமும் அவசியம் என எதிர்பார்க்கிறார்கள்.
- இன்றைய வாழ்க்கைக்கு இவை அவசியம்.
- இருவருமே உயர்ந்த சமூக நிலையை அடைய முயற்சிப்பவர்கள் ஆக இருத்தல் வேண்டும்.
- தம்பதியர் ஒருமித்த மனநிலை உள்ளவர்களாக இருந்தால் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற முடியும்.
உயர்ந்த சமூக நிலை
தொழில் வருமானம், வாழும் வாழ்க்கை, தரம் ஆகியவை சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுபவை. கணவன்-மனைவி இருவரும் இரண்டு விதமான சமூக தளங்களை கொண்டவர்களாக இல்லாமல் இருத்தல் அவசியம். இருவருமே உயர்ந்த சமூக நிலையை அடைய முயற்சிப்பவர்கள் ஆக இருத்தல் வேண்டும். இன்றைய வாழ்க்கைக்கு இவை அவசியம்.
வாழ்க்கைத் தரம்
எளிதாக கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால் அந்த இடத்துக்கு ஏற்பவே, உங்கள் சமூக அந்தஸ்து மதிப்பிடப்படுகிறது. பொருளாதார விசயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இருவரில் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும் குடும்பத்தின் உயர்வு பாதிக்கும்.
தோழமை உணர்வு
தம்பதியர் ஒருமித்த மனநிலை உள்ளவர்களாக இருந்தால் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற முடியும். உங்கள் வாழ்க்கை சூழலில் தோழமை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். இருவரும் உதவும் மனபான்மை உள்ளவர்களாக இருந்தால் நல்லது.
மனம் விட்டு பேசக் கூடிய
அவரவர் அலுவலக வேலைகளுக்காக எட்டு மணி நேரத்தை செலவிடுவதை போல தம்பதியர்களுக்கு தினமும் குறைந்தது சில மணி நேரங்கள் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். எல்லா சூழலிலும் உங்களோடு மனம் விட்டு பேசக் கூடிய துணையாக இருந்தால் நம்பிக்கையோடு நேர பயணத்தை எதிர்கொள்ளலாம்.