உங்களுக்கு நியாபகம் இருக்கா…!!!
காலங்கள் மாறிக்கொண்டே போனாலும், நினைவுகள் என்றும் அழியாதவை.. அப்படிப்பட்ட உங்கள் மனதில் நீங்காமல், நினைவலைகளில் இருக்கும் பொக்கிஷ உலகிற்கு போகலாம் வாங்க.. 80 ‘ஸ் 90 ஸ் தலைமுறைகளின் நியாபக நினைவுகள் இதோ உங்களுக்காக…
பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தது, வகுப்பு ஆசிரியை கண்டால் மரியாதையுடன் நடந்து கொண்டது, தினமும் ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கூடம் போனால் ஆசிரியை திட்டுவார்கள் என்று பயந்த கடைசி தலைமுறை. வகுப்பில் ஒன்றாக அமர்ந்து உணவுகளை பரிமாறிக்கொண்ட கடைசி தலைமுறை.. பள்ளி விடுமுறையில் சொந்தங்கள் வீட்டுக்கு போய் ஒரு வாரம், ஒரு மாதம் தங்கி இருந்தவர்களும் இவர்களே..
கிப்ட் மற்றும் வாழ்த்து அட்டைகள்
ஆசிரியை பாடம் எடுக்கும் போது அதற்கு மதிப்பு கொடுத்து கவனித்தவர்களும் கூட, பெரியவர்களுக்கு மரியாதை குடுக்க தெரிந்த பண்புகளை கொண்டவர்கள்… பண்டிகை காலங்களில் வீட்டில் அப்பா வாங்கி கொடுத்த ஆடைகளை விருப்பத்துடன் ஏற்று கொண்டவர்கள். பிறந்த நாட்களில் கிப்ட் மற்றும் வாழ்த்து அட்டைகள் அனுப்பிய கடைசி தலைமுறையம் கூட.
கடைசி தலைமுறையினர்
பள்ளிக்கூடம் போகும் போது அப்பா செலவுக்கு எவ்வளவு குடுத்தாலும், அதில் சிக்கனமாக செலவு செய்து மிச்சத்தை உண்டியலில் சேர்த்து வாய்த்த கடைசி தலை முறையினர். வீட்டிற்கு யார் வந்தாலும் வரவேற்க தெரிந்தவர்கள். அம்மாவுக்கு வீடு வேலையில் உதவி செய்த கடைசி தலைமுறை.. வீட்டில் எத்தனை பேரு இருந்தாலும் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து உண்ட தலைமுறையும் இவர்கள் தான்.
போஸ்ட் கார்டு, தபால்
போஸ்ட் கார்டு, தபால் வந்தால் அதை வாங்கி வந்து கொடுத்தவர்கள், இதை பயன்படுத்திய கடைசி தலைமுறையினர். தான் படித்த புத்தகங்களை நமக்கு முன்னாள் படித்த மாணவர்களுக்கு உதவும் என்று பத்திரமாக வைத்து கொண்டு அவர்களுக்கு கொடுக்கும் பொறுப்பாளிகளும் இவர்கள் தான். தனக்குரிய செலவை தானே ஏற்று கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இருப்பதால் தான் படித்த கைடுகளை பிற வகுப்பு மாணவர்க்கு பாதி ரேட்- ல் விற்பனை செய்த மாணவர்களும் இவர்கள்தான்.
விற்ற காசை இந்த வருட கைடு வாங்க உபயோக படுத்தியவர்கள். கூட பிறந்தவர்களுக்காக தன்னோட ஆசைகளை விட்டு கொடுத்த கடைசி தலைமுறையினர். வீட்டில் தனக்கு தேவையானதை தானே பார்த்து கொள்ளும் பக்குவத்தை பெற்றவர்கள் இவர்கள். தனக்கு இருப்பதை இல்லாத பிள்ளைகளுக்கு கொடுத்து உதவியவர்களும் இவர்களே.
கடைக்கு போனால் செலவை மிச்சம் செய்யும் கடைசி தலைமுறை. இப்படி சொல்லி கொண்டே போகலாம். கடைசி தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம்.
Pingback: இயற்கையான உரம் தயாரிக்கலாம்..!! | SlateKuchi