தினம் ஒரு கோயில்:- காளையார்கோயில் பெயர் எப்படி வந்தது தெரியுமா..?
சிவகங்கை மாவட்டம்- தொண்டி பெருவழிச்சாலையில் சிவகங்கையிலிருந்து 18கி.மீ தொலைவில் காளையார்கோயில் என்ற ஊரில், சொர்ணகாளிசுவரர் என்ற கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் தல சிறப்புகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
தல விருட்சம் : கொக்கு மந்தாரை
தீர்த்தம்:- சுதர்சன தீர்த்தம்
தல வரலாறு:- ஒருமுறை சுந்தரர், திருச்சுழி திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். இறைவா உன்னை காண முடியவில்லையே என வருந்திப் பாடினார்.
இதனையடுத்து சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார் அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால். இவ்வூர் காளையார் கோயில் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
நன்றி:- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை