இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமா? ஒதுக்கி தாங்க ஆகணும்!
பெரும்பாலான குடும்பப் பெண்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பது இது. எப்படித்தான் இதை போக்குவது தெரியல. அத இதனை போட்டு சலித்து போய்ட்டீங்களா? கொஞ்சம் கவனிங்க. பொதுவாக பெண்கள் முதல் உங்கள் வீட்டின் இளவரசி வரை முகத்தைப் பராமரிக்க அதிக நேரம் செலவிடுவார்கள். பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. உடனடியாக போகாது. சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும்.
- பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு.
- அத இதனை போட்டு சலித்து போய்ட்டீங்களா?
- சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும்.
வீட்டிலேயே சில டிப்ஸ்
முதலில் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். பித்தவெடிப்பிற்கு மருந்தை விட தண்ணீர் அதிகம் குடித்தால் குறையும். வீட்டிலேயே சில டிப்ஸ்களை பயன்படுத்தலாம். வேப்பிலை, மஞ்சள், சுண்ணாம்பு சிறிது இந்த மூன்றையும் அரைத்து விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பில் பூச முற்றிலும் நீங்கும்.
பித்த வெடிப்பின் மேல் பூச
பப்பாளி பழச்சாறை தேய்த்து காயவைத்து தண்ணீர் தெளித்து தேய்த்து கழுவ குணமடையும். மருதாணி இலைகளை அரைத்து பித்த வெடிப்பின் மேல் பூசலாம். வேப்பெண்ணை, மஞ்சள் பொடி இரண்டையும் குழைத்து பூசி வரலாம். அன்றாடம் படுக்கைக்குச் செல்வதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி துடைத்துவிலாம்.
பித்த வெடிப்பு வருவதை தடுக்க
தேங்காய் எண்ணெய் தடவி தூங்குவதால் கால் விரல்கள், பாதங்கள், வறட்சி இல்லாமல் சாஃப்ட்டாக இருப்பதுடன் பித்த வெடிப்பு வருவதை தடுக்க முடியும். குளித்து முடித்த பிறகு ஈரமில்லாமல் துடைத்துவிட்டு சிறிது விளக்கெண்ணெய் பித்த வெடிப்பு மேல் தேய்க்க வேண்டும். இவற்றை செய்துவர விரைவில் பித்த வெடிப்பை குணப்படுத்தலாம்.