உங்க வீட்டில் குபேரன் வாசம் செய்யணுமா..!!
பெரியவர்கள் சொல்வார்கள் வீட்டில் எப்பொழுதும் ஊறுகாயை வைத்திருக்க வேண்டும். ஜாடியில் வித விதமான ஊறுகாய் வீட்டிலேயே புதிதாக தயாரித்து, உங்கள் ஜாடியில் வைத்திருங்கள். இதனால் குபேரன் வாசம் செய்வார். இப்படி விதவிதமான ஊறுகாய் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். ஊறுகாய் போடும் போது ஈரமில்லாத கரண்டியும், பாத்திரத்தையும் யூஸ் பண்ணனும்.
நார்த்தங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் : ஒரே மாதிரி தான் செய்ய வேண்டும். இதில் எந்த பழம் கிடைத்தாலும் ஊறுகாய் போடுங்க. எலுமிச்சை பழங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை கழுவி நான்காக நறுக்கி ஒரு ஈரமில்லாத ஜாடியில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கல் உப்பு போடவும். உப்பு போட்டுக் கொள்ள ஊறுகாய் சீக்கிரம் எளிதில் கெட்டு விடாது.
ஜாடியின் மேல் ஒரு காட்டன் துணியை வைத்து மூடிவிட்டு, இந்த ஜாடியை வெய்யிலில் மூன்று நாட்களுக்கு வைத்து எடுங்கள். மூன்றாவது நாள் கழித்து ஒரு கடாயில் நல் எண்ணெய் ஒரு கரண்டி விட்டு, ஒரு ஸ்பூன் கடுகு தாளித்து, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், சேர்த்து வதக்கி தேவையான மிளகாய்தூள் போட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஊறுகாய் ஜாடியில் கொட்டி நன்றாகக் கிளறி, இன்னும் மூன்று நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுத்தால் எலுமிச்சை ஊறுகாய் தயார்.
நெல்லிக்காய் ஊறுகாய் : நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால், வைட்டமின் சி சத்து உடலில் கிடைக்கும். இதை தினமும் நாம் உண்ண முடியாத காரணத்தால், இதை ஊறுகாயாக செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் சுவையும், மணமும் அருமையாக இருக்கும். கால் கிலோ நெல்லிக்காய் வாங்கி வந்து கழுவி பொடியாகத் துருவிக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், சிறிது பெருங்காயத் தூள், சேர்த்து வதக்கி துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். தேவையான மிளகாய்தூள் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு போட்டு, வதக்கி விட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது ஊறுகாய் தயாராக இருக்கும்.
இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, அதை ஒரு ஜாடியில் மாற்றிக் கொள்ளவும். ஜாடி இல்லாதவர்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்ல மாத்தி வைச்சுக்கோங்க. இதை தினமும் யூஸ் பண்ணும் போது ஈரமில்லாமல் நன்றாக காய வைத்த ஸ்பூனை பயன்படுத்த வேண்டும். ஒரு மாதம் ஆனாலும் இந்த நெல்லிக்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், நீண்ட நாட்களுக்கு வரும்