சமையல் குறிப்பு

வீட்டில் சமையல் கமகமக்க இது வேணும்ங்க..!!

கமகமக்கும் குழம்பு பொடிகள் எப்படி செய்வது பார்க்கலாம். நாம வைக்கும் குழம்பின் சுவை தல கலக்கக்கூடிய பொடியில் தான் டேஸ்ட் இருக்கு. கலக்கக்கூடிய கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டிலேயே தரமாக நாமே தயாரிக்கலாம். ஒரு கிலோ க்கு பொடி அரைக்க என்னென்ன மெசர்மென்ட் ஒவ்வொரு பொருட்களையும் சேர்த்தா அதன் சுவை கரெக்ட்டா இருக்கும் இன்று பார்க்கலாம்.

குழம்பு பொடி இந்த பொடியை செஞ்சுவச்ச எல்லா குழம்புகளுக்கு இதை யூஸ் பண்ணலாம். பொரியலுக்கு மேல தூவி விட்டா அதனுடைய சுவை அதிகமாகும். சொல்லப் போற லிஸ்ட் உங்க வீட்டுக்கு அருகாமையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் சுத்தமானதா இருக்கறத பாத்து வாங்கி வெச்சுக்கோங்க.

தேவையான பொருட்கள்

அரை கிலோ வரமல்லி, காரம் அதிகம் தேவைப்படுகிற அரைக்கிலோ வரமிளகாய் சேர்த்துக்கோங்க. காரம் கம்மியா சாப்பிடுறவங்க கால்கிலோ வரமிளகாய் போட்டோ போதுமானது. இதோட இப்ப சொல்ற பொருளெல்லாம் சேர்த்துக்கோங்க. 50 கிராம் மிளகு, 50 கிராம் சீரகம், 50 கிராம் வெந்தயம், 50 கிராம் சோம்பு, 100 கிராம் கடலைப்பருப்பு, 50 கிராம் உளுந்தம்பருப்பு, 100 கிராம் பச்சரிசி, கசகசா 50 கிராம், 50 கிராம் கடுகு, 100 கிராம் விரலி மஞ்சள், கட்டி பெருங்காயம் 10 வில்லை, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, 10 கிராம் பட்டை, 10 கிராம் கிராம்பு, பிரிஞ்சி இலை, அண்ணாச்சி மொக்கு, வெந்தய இலை காய்ந்தது, இது மூன்றும் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

மேற்கூறிய லிஸ்டில் இருக்கிறத எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து வச்சுக்கோங்க. வெயில் காலத்துல இத வெயில்ல நல்லா ஒரு தட்டில் பரப்பி ஒரு ரெண்டு மூணு நாளைக்கு வச்சுடுங்க. நல்லா வெயிலில் காயனும் உடைச்சா நொருங்கனும். தாம்பாளம் அல்லது நியூஸ் பேப்பர் விரித்து நன்றாக பரப்பி விட்டு காய விடவும். அந்தளவு நல்லா காய வைத்து அரைத்த பொடி வண்டு பிடிக்காது. ஒரு வருஷம் ஆனாலும் கெடாது. அதிகபட்சமாு ஆறு மாதம் வரை கெடாது. வண்டு பிடிக்காது.

இந்த லிஸ்ட்ல சொல்லியிருக்கிற கடலைப்பருப்பு, உளுந்து, பச்சரிசி, வெந்தயம், வரமல்லி இவற்றை தனித்தனியாக வாசனை போகும் வரை இளம் வறுப்பாக வறுத்து எடுத்துக்கலாம். வறுத்து அரைக்க நாளை பொடியோட வாசனை குழம்புல தூக்கலா இருக்கும். ஒரு சிலர் அதை அப்படியே வெயில்ல காய வச்சிட்டு மூணு நாள் கழிச்சு மிஷினில் கொடுத்து அரைத்து விடுவார்கள். அது ஒரு டேஸ்ட் கொடுக்கும். ஒரு சில பொருட்களை அடுப்பில் வைத்து வறுத்து எடுத்து, ஆறவிட்டு அரைக்கும்போது அது ஒரு டேஸ்ட் கொடுக்கும்.

சமையல் கமகமக்க

மேற்கூறிய இந்த பொருள் எல்லாத்தையும் அடுப்பில் வறுத்து ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கி வச்சுக்கோங்க. அரைத்து வந்த பிறகு நல்ல காயவிடுங்கள். அப்படியே மூடி வச்சா, பொடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஆறவைத்த எடுத்ததும் மசாலா சம்படம் அலமாரியில் வச்சுடுங்க. உங்களுக்கு வேணும் போது ஒரு சின்ன பாக்ஸில் மட்டும் அப்பப்போ எடுத்து யூஸ் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *