வாழ்வில் மென்மேலும் வளர்ச்சி அடைந்து, முன்னேற்றப் பாதையில் செல்ல..!
முன்னோர்களை எப்படி வழிபடலாம். ஒரு குடும்பத்துக்கு அம்மாவும், அப்பாவும் இல்லையென்றால் இருவரில் ஒருவர் இல்லை என்றால், இன்னொருவர் அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடலாம். இருவருமே இல்லை என்றால் மகன் கும்பிடவேண்டும். ஏன் நாம் இதை செய்ய வேண்டும். இதை செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி, அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். அவர்கள் ஆசிர்வாதம் கிடைப்பதால், நம் வாழ்வில் மென்மேலும் வளர்ச்சி அடைந்து, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.
அமாவாசை விரதம்
அமாவாசை விரதம் முன்னோர்களுக்கு கடைபிடிக்கும் போது, காலை எழுந்தவுடன் வாசலில் கோலம் போடக்கூடாது. முதல்நாளே வீட்டை கழுவி வீட்டின் முதல் நாளே சுத்தமாக வைத்திருக்கவேண்டும். தலையணை உறை, போர்வைகளை முதல் நாளைத் துவைத்து வைத்து விடவேண்டும். வீட்டில் அழுக்குத் துணிகளையும் துவைத்து விடவும்.
செய்யக் கூடாதது
வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அன்று காலை தெய்வங்களுக்கு பூவை சாற்றுதல், விளக்கேற்றுதல் பூஜை செய்தல், போன்றவைகளை செய்யக்கூடாது. வாசனை பொருட்களை உபயோகிக்க கூடாது. சந்தானம் குங்குமம் அணிதல் கூடாது. தெய்வங்கள் சம்மந்தப்பட்ட எதையும் நீங்கள் அணிய கூடாது. சாம்பிராணி போடுதல் மணி அடித்தல் கூடாது இதனால் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வரமாட்டார்களாம்.
அம்மாவாசை அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு, இன்று காலை 6-7 am பசுவிற்கு அகத்தி கீரை, வாழை பழம் வாங்கி கொடுங்க. நாம் படையலிட்டு கும்பிடும் அன்று நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அன்று காலை ஒரு வேளை மட்டும் விரதம் இருக்க வேண்டும். இதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இந்த விரதத்தை அவர்களை நினைத்து மனதார இருக்க வேண்டும். அவர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்தமான சமையலை சமைத்து படைக்க வேண்டும். படையலிட்டு அவர்கள் போட்டோவிற்கு முன் தீபமேற்றி, அவர்களுக்கு பிடித்தமான பூவை வைக்க வேண்டும். துளசி வைக்கலாம்.
பிறகு வாழை இலை வைத்து, அவர்களுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் வைத்து, தூபதீபம் காட்டி வழிபட்ட பிறகு, காக்காவிற்கு சாப்பாடு வைக்க வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட்ட பிறகு, பெண்கள் சாப்பிடலாம். இன்றைய தினத்தில் உங்களால் முடிந்த அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். யாருக்காக அன்று படைகள் படைக்கிறீர்களோ? அவர்களுக்கான உடையை வாங்கி தானம் செய்யலாம். அம்மா இல்லையென்றால் அம்மாவிற்காக ஒரு சேலை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.
விரதம் முடிவு பெற
அப்பா இல்லை என்றால் வேஷ்டி, சட்டை வாங்கி பெரியவர் ஒருவர் இல்லாதவர்களுக்கு கொடுங்கள். இந்த பூஜை எல்லாம் முடித்துவிட்டு, அன்று மாலை வீட்டை துடைத்து வாசலை கழுவி, கோலம் போட வேண்டும். ஏனென்றால் அன்று மூதாதையர் வீட்டிற்கு வந்து சென்று இருப்பார்கள். அவர்கள் போய் விட்டதும் நாம் வாசலில் கோலம் போடுவதால் அன்று இரவு லட்சுமி வீட்டிற்கு வருவாள். அன்று மாலை தெய்வங்களுக்கு பூ வைத்து விளக்கேற்றி பூஜை செய்யலாம். இத்துடன் உங்களுடைய விரதம் முடிவு பெறுகிறது.
ஒவ்வொரு அமாவாசையும் இதை செய்ய முடியாதவர்கள் முக்கியமான அம்மாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆவது செய்வது நல்லது. இறந்தவர்களுடைய திதி பார்த்தும் வருஷம் வருஷம் கும்பிடலாம். இது இன்னும் விசேஷமானது. இந்த முறையில் நீங்கள் பித்ருக்களை கும்பிடுவதால் குடும்பத்தில் சந்தோசம் நிலைத்திருக்கும். சகல செல்வங்களும் வந்து சேரும்.