கல்விதேர்வுகள்பத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்பு

படித்தல் பாசீட்டீவாக சிந்தித்தால் அதிகமதிபெண்களுடன் தேர்வில் வெற்றி உறுதி!

பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அதிக அளவில் தன்னம்பிக்கை மாணவர்களிடையே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி மற்றும் பாஸிட்டீவ் திங்கிங் இருந்தால், உங்களை யாராலும் வெல்ல முடியாது மாணவர்களே!, வெற்றி நிச்சயம் இதுவே என் சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம் போன்ற ஊக்கப்படுத்தும்  பாடல்களை  கேட்டு சுய ஊக்கப்படுத்துதல் அவசியம் ஆகும்.

ஸ்டேட் போர்டு தேர்வில் வெற்றி பெற படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே உங்களுக்கான போட்டி தேர்வினை சிறப்பாக படிக்கவும் தேவைப்படும் உதவிகளை பெற்றோர்களிடம் கேட்டு பெற வேண்டியிருந்தால் எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டும் என்று என்பதை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். 

உணவில் கவனம் ஆரோக்கியமான உணவு பண்டங்களை மட்டும் உண்ணுவது   சிறந்தது. தேர்வுகாலம் முடியும் வரை முன்னெச்சரிக்கையாக இருந்து செயல்படுதல் நலம் பயக்கும். 

வெய்யில் காலம் நெருங்கின்றது அதற்கு தகுந்தார் போல் மாணவர்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள்  கோடை வெய்யிலுக்கு ஏற்றவாறு மாணவர்களை பாதுகாக்க வேண்டிய உங்கள் கடமை ஆகும். 

நல்ல இசை மற்றும் ஊக்கப்படுத்து பாடல் வரிகள் மாணவர்களுக்கு உகந்த படிப்பு சூழல்களை உருவாக்கித்  தர வேண்டியது உங்களின் பணியாகும். 

யோகா, காலாற நடத்தல், உடற் பயிற்சி செய்தல், செடி வளர்ப்பு போன்ற பணிகள் படிப்பிற்கிடையே செய்யலாம். 

நாம் எதுவாக நினைக்கின்றோமோ அதுவாக ஆகின்றோம் என்பதை  நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டிய  அவசியம் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 

படித்தவற்றை திரும்பி படிக்க வேண்டும். ரிவிசன்  சரியாக செய்த படித்தவற்றினை நல்ல தெளிவாக நினைவில் வைத்து கொள்தல் நலம் பயக்கும். 

ரிவிசன் டெஸ்ட்க்கு படிக்க வேண்டியது அவசியமாகும் ரிவிசன்  டெஸ்ட் கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை  திட்டமிட்டு படித்து தேர்வில் எழுதி   நேர மேலாண்மை கைதேர்ந்து செயல்பட்டால் நிச்சயம்.   பொதுத்தேர்வில் சிறப்பாக மாணவர்கள் செயல்பட முடியும். 

ஸ்பெஷல்  கிளாஸ் மற்றும் ஸ்பெஷல் டியூசன் வகுப்புகளுக்குச் சரியாக சென்று கற்றுகொண்டால் தேர்வு நல்ல உதவிகரமாக இருக்கும். 

தேர்வுகாலத்தில் இரவு 10.30க்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுந்து படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தினமும் 21 முறை நான் பாஸாயிட்டேன்  அதிக மதிபெண்கள் பெற்றேன் என தொடர்ந்து  சொல்லி கொண்டு வாருங்கள் அது உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *