ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

இனி சமையலறை குறித்த கவலை வேண்டாமே..!!

இந்த குறிப்புகளை குறித்து உங்க சமையலறையை மேம்படுத்துங்க. இனி சமையலறை குறித்த கவலை வேண்டாமே.

சாலட்டுகளை தயாரிக்க மரம் மற்றும் கண்ணாடியினால் ஆன பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. உலோகத்தினால் ஆன பாத்திரங்களை உபயோகிக் காதீர்கள்.

பூண்டு தோல் சுலபமாக நீக்க 15 மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுப்பதால் உரிக்க முடியும்.

கீரை வகைகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் முன் அதிக ஈரத்தன்மை இல்லாமல் இருந்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். கீரை வகைகளை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைத்திருப்பதால் அதிக நாட்கள் நல்ல நிலையில் பாதுகாக்க முடியும்.

அதிக எலுமிச்சை பழச்சாறு கிடைப்பதற்கு பழத்தை பத்து நிமிடங்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்து பிழியலாம்.

லெட்டூஸ் கீரைகள் செலரி பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகித பைகளில் பத்திரப் படுத்தலாம்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிபிளவர் போன்ற வேக வைக்க பொழுது வரும் வாடையை தவிர்க்க சிறிது இஞ்சி துண்டு அல்லது சிறிதளவு வினிகர் சேர்க்கவும்.

காளான் நல்ல நிலையில் உள்ளதா என்று அறிய அதனுடைய மேல் பகுதியும், காம்புபகுதியும், நெருக்கமாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

சாலட்டுகள் புதியதாக நறுக்கியது போல் இருக்க, அதை பரிமாறும் பாத்திரத்தை முதலில் குளிர்சாதன பெட்டியில் குளிர்ரூட்டவும். இதனால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

நறுக்கிய காய்கறிகளை கழுவும் போது சிறிது நேரம் பேக்கிங் சோடா நீரினால் கழுவுவதால், அதன் நிறம் மாறாமல் இருக்கக் கூடும்.

பச்சைக் கீரைகள் பச்சை நிறம் மாறாமல் இருக்க, அதை சமைக்கும் பொழுது ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

சிறிய வெங்காயம் மற்றும் பூண்டை குளிர்ந்த நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து உரிக்கலாம். அல்லது கையில் எண்ணைதேய்த்து கொண்டு தோல்களை சிரமமில்லாமல் அகற்றலாம் அல்லது சுடுநீரில் சிறிது நேரம் வைத்திருந்து எடுப்பதால் சுலபமாக தோல் நீக்க முடியும்.

வெங்காயம் வெட்டும் போது தண்ணீர் சுரக்காமல் இருக்க வெங்காயத்தை தண்ணீரில் முதலில் முக்கி எடுத்து, வெட்ட பயன்படுத்தும் கத்தியை லேசாக சூடுபடுத்தி உபயோகிக்கலாம்.

பார்பெக்யூ தணலை தூண்டி விட பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் உபயோகப்படுத்தக் கூடாது.

எறும்புகள் சமையலறை மேடையில் அல்லது வீட்டின் எந்த பகுதியில் வராமலிருக்க ஒரு பகுதி வெள்ளை வினிகரை 3 பங்கு தண்ணீருடன் கலந்து தொடைக்கலாம்.

எந்த பண்டத்தையும் ஊற வைப்பதற்கு கண்ணாடி பாத்திரங்களை உபயோகப் படுத்துங்கள்.

பாட்டில்கள் மூடி திறப்பதற்கு கடினமாக இருந்தால் ஒரு துணியை சுடுநீரில் நனைத்து அதைக் கொண்டு மூடியை திறந்தால் எளிதாக திறக்க முடியும். இல்லையெனில் மூடி பாகம் சுடு நீரில் மூழ்கும் படி தலைகீழாக சிறிது நேரம் வைத்திருந்து எளிதாக திறக்க முடியும்.

ஏதேனும் சூடாக பாட்டிலில் ஊற்ற வேண்டியிருந்தால் ஒரு மரப் பலகையின் மீது அல்லது தடிமனான அட்டை மீது வைத்து பின் ஊற்றுவதால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

ஒரு பச்சை உருளைக்கிழங்கை அம்மியில் அரைப்பதால் முதலில் அரைத்த வெங்காயம் பூண்டு மற்றும் மசாலா ஏற்பட்ட வாசனைகள் மறையும்.

எலுமிச்சம் பழம் அல்லது ஆரஞ்சு தோலை கைகள் அல்லது கத்தியை தேய்த்துக் கழுவுவதால் அதில் இருக்கும் பூண்டு வாடையைப் போக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *