நூடுல்ஸ் மேலுள்ள ஆசை தீர்வதில்லையா.!
நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு எத்தனை ஸ்னாக்ஸ் வரைட்டீஸ் கொடுத்தாலும், நூடுல்ஸ் மேலுள்ள ஆசை தீர்வதில்லை. இதனால் கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி கொடுப்பதுடன், தேவையில்லாத உடல் உபாதைகளையும் நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இதற்கு வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கலாம்.
காய்கறி நூடுல்ஸ் / கலர்ஃபுல் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் ஒரு பாக்கெட், கேரட் 100 கிராம், கோஸ், பீன்ஸ், பட்டாணி தலா அரை கப், குடைமிளகாய் சிவப்பு, பச்சை தலா அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் 3, சோம்பு அரை ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மிளகு தூள் அரை ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிது, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : நூடுல்ஸ் உடன் உப்பு சேர்த்து எண்ணெய் சிறிது விட்டு வேக வைத்து, பச்சை தண்ணீரில் அலசி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் குடமிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளையும் போட்டு நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி, மிளகுத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
பச்சை வாசனை போனதும் எல்லாம் வதங்கியதும் அவித்த பட்டாணி போட்டு, கிண்டி பிறகு நூடுல்ஸ் போட்டு நன்றாக மசாலா ஒன்று சேரும் படி கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவவும்.
காரம் தேவைப்பட்டால் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். தேவையானால் சிறிது எலுமிச்சம் பழம் பிழிந்து பரிமாறலாம். ஆரோக்கியம் மேம்பட குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.