ஆன்மிகம்ஆலோசனை

வாஸ்து தோஷ பிரச்சனைகள் தீர.!

வீட்டின் ஈசானிய மூலையில் அந்த வீட்டின் பெரியவர்கள் அமர்ந்து காஸ்மிக் முத்திரை வைத்து ஜெபம் செய்ய வேண்டும். இந்த வீட்டின் ஆற்றல் அதிகப்படும். இந்த வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் போக வேண்டும் என்று தியானம் செய்ய வேண்டும்.

எதிர்மறை எண்ணங்கள் விலக

இவ்வாறு தியானம் செய்வதால் வீட்டினுடைய எதிர்மறை எண்ணங்கள் விலகிச் சென்று காஸ்மிக் எனர்ஜி வீட்டிற்கு வந்து சேரும். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விரதமிருந்து வழிபடுவதாலும், வீட்டினுடைய வாஸ்து பிரச்சனை தீரும்.

வீட்டின் வாசலில் விநாயகர் படம் வைத்தாலும் வீட்டிற்குரிய வாஸ்து பிரச்சனை தீரும். வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு வைப்பது. ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து பூக்களை போட்டு வைப்பது.

வீட்டு வாசலில் இரண்டு பக்கமும் எலுமிச்சையை கட் செய்து மஞ்சள், குங்குமம் தடவி வைப்பது இவையெல்லாமே வாஸ்து தோஷத்தை போக்கும்.

தோஷம் உருவாகும்

தினம் தோறும் வீட்டில் சாம்பிராணி புகை போடுவதால் நல்ல நறுமணம் கமழும் தோஷம் போகும். வீட்டில் உடைந்தத பழைய பொருட்களை, தேவையில்லாத ஃபைல்களை சேர்த்து வைக்காதீர்கள். இதனால் தோஷம் உருவாகும்.

பழையதை அப்புறப்படுத்துங்கள். இதனால் தோஷ நிவர்த்தி கிடைக்கும். வீட்டின் நில வாசலில் மஞ்சள் பொட்டு, குங்குமம் வைத்து தோரணங்கள் போட்டு, சுத்தமாக வைத்து அழகாக வைக்க வேண்டும்.

கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம்

கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், கந்த குரு கவசம், போன்ற பாடல்களை வீட்டில் அடிக்கடி ஒலிக்க விடுங்கள். இது வீட்டிற்கு தோஷத்தை அண்ட விடாது.

5 விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவதால் அந்த வீட்டில் உள்ள பஞ்சபூத பிரச்சனைகள் நீங்கும். காலை பிரம்ம முகூர்த்தம் அல்லது அதிகாலையிலோ அல்லது மாலையிலோ இப்படி ஏற்றி வழிபட்டு வரலாம். இதனால் ஏற்படும் வாஸ்து தோஷ பிரச்சனைகள் தீரும்.

கருட கிழங்கு

கருட கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வீட்டிலும், கடைகளிலும் கட்டி வைப்பதால் இதனாலும் வாஸ்து பிரச்சனை தீரும்.

இந்தக் கிழங்கில் பல ஆற்றல்கள் உயிருள்ளவை என்பதால் வளரக் கூடியவை. நமக்கு இருப்பதை மகிழ்வாக ஏற்றுக் கொள்ளுங்கள். பல பேர் இருப்பதற்கு இடமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். நமக்கு இப்படி இருப்பதற்கு ஒரு வாய்ப்பை கடவுள் கொடுத்திருக்கிறார். என்று மகிழ்வோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *