வடகிழக்கு பருவமழைக்கு பயப்பட வேண்டாம்; பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தெளிவான விளக்கம்
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால் அதனை சாதுர்யமாக எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 01.11.2023 வரை 101.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 43 சதவிகிதம் குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 01.11.2023 முடிய, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 32 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 5 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இன்று நவம்பர் 2ஆம் தேதி காலை 8.30 மணி முடிய 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 37.03 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.06 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தி அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் எந்தவித தடையும் இன்றி எரிபொருள் கிடைக்கவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று கடலோர மாவட்டங்களிலும் நாளைய தினம் மற்ற மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது எனவே இதற்காக 400 பேர் பேரிடர் மேலாண்மை பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். எனவே கனமழை குறைத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு மாத காலமாக எடுக்கப்பட்டு எதற்காக பல பேர் பணிகள் தயார் நிலையில் உள்ளனர்.169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 260 ராட்சச பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தகவல் கூறியுள்ளோம் என பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் கூறியுள்ளார்.
சென்னையில் கன மழை அதிகம் பெயர் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களுக்கும் பெருநகர சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக கண்காணிப்பு அலுவலர்கள் பணிகள் அமர்த்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.