ஆன்மிகம்ஆலோசனை

கோவிலுக்கு போகும் போது இதெல்லாம் செய்ங்க..!!

பெண்கள் கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும். கோவிலுக்கு போகும் போது என்னென்ன செய்ய வேண்டும். கோவிலுக்குள் என்னென்ன செய்யலாம், என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பெண்கள் தினமும் கோவிலுக்கு செல்ல முடியா விட்டாலும், வாரம் ஒரு முறையாவது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பழக்கம் பிள்ளைகளுக்கும் பழக்குங்கள்.

பாசிட்டிவ் எனர்ஜி

பெண்கள் கோவிலுக்கு போகும் போது சேலையில் தான் செல்ல வேண்டும். இதனால் கோவிலுக்குள் கோபுரத்தை சுற்றியுள்ள வைப்ரேஷன் நம் உடலில் ஈர்க்கப்பட்டு, நமக்குள் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தரும், என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இதனால் தான் பெரியவர்கள் தினமும் காலை தம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அரை மணி நேரமாவது கோவிலுக்கு சென்று வந்தார்கள்.

இதனால் நம் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் அன்றைய நாட்கள் சிறப்பாக இருக்கும். கோவிலுக்கு உள்ளே சென்றதும் முதலில் கொடிக் கம்பத்தை வணங்க வேண்டும். பிறகு கன்னி மூல கணபதியை வணங்கி விட்டு பிறகு தான் மற்ற சன்னிதானங்களை வணங்க வேண்டும். முக்கியமான நாட்களில் கோவிலுக்கு சென்றால் விளக்கு போட வேண்டும். உங்களால் என்ன முடிகிறதோ அதை கோவிலுக்கு வாங்கி செல்லுங்கள். வெறும் கையோடு எப்பொழுதும் கோவிலுக்கு செல்லாதீர்கள்.

நாம் இப்பொழுது இருக்கும் நிலைமையை உணர்ந்து அதற்காக நன்றி தெரிவிப்பதற்காகவே நாம் கோவிலுக்கு செல்கிறோம். அதனால் உங்களால் முடிந்ததை கோவிலுக்கு வாங்கி செல்லுங்கள். சூடம், பத்தி, தாம்பூலம் விளக்கேற்ற எண்ணெய், பூ மாலை, துளசி இதில் ஏதாவது ஒன்றை கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். கோவிலுக்குள் யாரிடமும் பேசக்கூடாது. முடிந்தவரை அமைதியை கடைப்பிடிக்கலாம்.

பிரார்த்தனை செய்யுங்க

இறைவனை வணங்கிய பிறகு, சுற்று பிரகாரத்தை ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ அமைதியாக மெதுவாக சுற்றி வர வேண்டும். பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்யுங்கள். கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை திருநீறு, குங்குமம் பிரசாதங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கோவிலிலே விட்டு வரக்கூடாது.

வீட்டிற்கு கொண்டு வந்து அதை வீட்டின் பூஜை அறையில் உள்ள திருநீறு, குங்குமத்துடன் அந்த பிரசாதத்தையும் கலந்து வைக்க வேண்டும். இதை தினமும் நீங்கள் வெளியே செல்லும் போது இந்த பிரசாதத்தை அணிந்து செல்வதால், நீங்கள் போகும் காரியம் வெற்றிகரமாக அமையும், இதை நம்பிக்கையுடன் இதை செய்வதால் அது நிகழும்.

பெண்களுக்கு கோவிலுக்கு செல்லும் போது தலையில் பூ வைக்க வேண்டும். கோவில் சன்னிதானத்தில் இருந்து சாமி பிரசாதமாக கொடுக்கப்பட்ட பூக்களை அங்கேயே விட்டு விடாமல், பத்திரமாக வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். அதில் சிறிது உங்கள் தலையிலும், சிறிது பூஜை அறையில் சாமி படங்களுக்கு வைக்காமல், பூஜைக்கு முன்னாடி படங்களுக்கு முன்னாடி வைக்கலாம். கோவிலுக்குள் சென்றதும் இறைவனை வணங்கி விட்டு வெளியே வரும் போது தான தர்மங்களை செய்யாதீர்கள். உள்ளே போகும் முன் வெளியே இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த தானம் தர்மங்களை செய்வது சாலச் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *