செய்திகள்

பழக்கடை அன்பழகன் இறந்தார்!

ஜெ அன்பழகன் பிறந்தநாள் இறந்தநாளாக மாறிய துக்ககரமான இழப்பு திமுகவுக்காக

‘தி வாய்ஸ் ஆப் டி எம் கே’ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் திரு அன்பழகன் அவர்கள் பழக்கடை வைத்து தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்த ஜெயராமன் என்பவரின் மகன்.

பிறப்பு மற்றும் அரசியலில் நுழைவு:

10 ஜூன் 1958 யில் பிறந்த அன்பழகன் அவர்கள் சிறு வயது முதலே தைரியமானவராகவும் பள்ளிப்பருவத்தில் மேடை பேச்சாளராக திகழ்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்து சட்டக்கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.

 அதோடு சட்டக்கல்லூரியில் தன் நண்பர்களுடன் அவர் பல பிரச்சினைகளுக்கு முன்நின்று போராடியுள்ளார். திரு எம்ஜிஆர் அவர்கள் சட்டசபையில் பேசிக் கொண்டிருக்கும் போது தன் நண்பர்களுடன் அவர் பிரச்சினைகாக முன்நின்று போராடியுள்ளார். அப்பொழுது எம்ஜிஆர் அவர்கள் இந்த மாணவர்களிடம் சட்டம் பயிலும் நீங்களே இப்படி போராட்டம் நடத்துவது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

1976 தன் தந்தை பழக்கடை ஜெயராமன் அவர்களை எமர்ஜென்சி காரணமாக காவலர்கள் தேடி வர திரு அன்பழகன் அவர்களை கைது செய்து சென்றுவிட்டனர். பதினெட்டு வயதிலேயே தன் தந்தைக்காக வேலூர் சிறையில் இருந்தார். இந்த செய்தியை கேட்ட அவர் என் தந்தை போலீசாரிடம் ஆஜரானார். பின்பு தன் தந்தையுடன் எல்லா கட்சி சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் துணையாகச் சென்றார். தந்தையின் வழிப்படி அரசியலில் நுழைந்தவர். அதுவே அவர் அரசியலுக்குள் வந்த கதை.

கலைஞர் அவர்களுக்கு துணையாக ஸ்டாலின் அவர்கள் நிற்பதுபோல் இளைஞரணி தலைவராக நுழைந்த ஜெ. அன்பழகன் அவர்கள் ஸ்டாலின் அவர்களுக்கு துணையாக நின்றார்.

சாதனை:

சட்டமன்றத் தேர்தலில் 2001 2006 2016 என மூன்று முறை வெற்றி பெற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்  எம்.எல்.ஏ.வாக திகழ்ந்தவர். அதுமட்டுமல்லாமல் ஆறு மாவட்ட தொகுதிகளை பார்த்துக் கொண்டுள்ளார்.

தொழில்:

திரை உலகில் தயாரிப்பாளராகவும், திரைப்படத்தை விநியோகிப்பாளராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

உடல்நலம்:

15 வருடங்களுக்கு முன்பு கல்லீரல் அறுவை சிகிச்சை (லிவர் டிரான்ஸ்பிளான்ட்) செய்தாலும் மக்களுக்கு அயராமல் உதவி புரிந்து வந்தார்.

சமீபத்தில் 2 ஜூன் 2020 மூச்சுத் திணறல் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து பரிசோதனையும் செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரிசோதனை உறுதி செய்யப்பட்டது. 

‘இவரின் உடல்நலம் தேர்ச்சி அடைகிறது’ என்று மருத்துவர்கள் கூறிய வார்த்தைகளின் படி நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இவரின் உடல்நிலை பற்றி விசாரித்துள்ளார். 

தி.மு.க.வின் தலைவரான ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

மறைவு:

ஜெ. அன்பழகன் அவர்களின் தொண்டர்கள் அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்து விடுவார் என்று நம்பி இருக்கையில் சிகிச்சை பலனின்றி 10 ஜூன் 2020 அன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *