Prepare Bathursha: பண்டிகை ஸ்பெஷல் பாதுர்ஷா செய்ய சூப்பரான ஒரு டிப்ஸ்..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் முகத்தில் புன்னகை வரும் அளவிற்கு விரும்பி சாப்பிடுவர் . நமக்கும் நமது பாரம்பரியத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு பண்டிகை என்று வந்தாலே நம் நினைவிற்கு வருவது அம்மா இந்த முறை என்ன ஸ்வீட் செய்யப் போகிறார் என்பதுதான். இலைகளில் ஒப்பிற்கு அடுத்து முதலாவதாக வைப்பதும் இனிப்பு தான் விருந்தினர்கள் நம் வீட்டிற்கு வந்தால் முதலில் கொடுப்பதும் இனிப்பு தான் ஒரு நல்ல காரியம் என்றாலே இனிப்பு இல்லாமல் இருக்காது எனவே இனிப்பிற்க்கும் நமது பாரம்பரியத்திற்கும் எப்பொழுதும் ஒரு கனெக்சன் இருந்து கொண்டே உள்ளது. இனி கடைகளில் சென்று இனிப்பு வாங்க வேண்டாம். வீட்டிலேயே ஒரு அருமையான ஸ்வீட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் ..வர போகும் தீபாவளிக்கு கூட நீங்கள் இதை செய்து அசத்துங்கள்..
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 250 கிராம்
வெண்ணெய் – 50 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
தயிர் – 100 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
பாதுர்ஷா செய்முறை
முதலில் அகலமான ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் பேக்கிங் சோடா ,பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். கலக்கிய பின்பு இதனுடன் தயிர் மற்றும் வெண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவை அரை மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு சர்க்கரை நீரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பிசுக்கு பாகு அளவிற்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் நாம் ஊறவைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதனை வடை போல் கைகளால் தட்டி எடுத்துக்கொண்டு நடுவில் விரல்களை வைத்து ஒரு ஓட்டை போட்டு பின்பு அதனை சூடான எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வருத்தெடுத்த பாதுர்ஷாக்ககளை சர்க்கரைப்பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து விடவும் . அவ்வளவுதான் சுவையான ஸ்பெஷல் பாதுர்ஷா ரெடி.
ஊறிய பாதுர்ஷாக்களை எடுத்து அதன் மேல் முந்திரி, பாதாம் ,பிஸ்தா துருவலை சேர்த்து அனைவருக்கும் பரிமாறுங்கள்…அவர்கள் உங்கள் ஸ்வீட்டிற்கு எப்பொழுதும் அடிமை தான்.