தித்திக்கும் தீபாவளி வருகை
தீபாவளி பண்டிகை இந்திய பண்டிகைகளில் முக்கியமானதாகும். தீபாவளியில் பூஜை, பலகாரங்கள், பட்டாசு வெடித்தல், மகிழ்ச்சி பகிர்தல், ஒற்றுமை உணர்வு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
தொடர் பண்டிகைகள்
கௌரி பூஜை கொண்டாடிய பின்பு விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடுவோம். நவராத்திரி கொண்டாட்டங்கள் தீபாவளிக்கு முன்பு தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகின்றது. நமது வாழ்வின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் தீபாவளிக்கு இன்னும் 60 நாட்கள் மட்டுமே முழுமையாக இருக்கின்றது.
தீபாவளி இந்திய பாரம்பரியத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் தென்னிந்தியாவில் ஒரு நாள் முதல் மூன்று நாள்கள் வரை தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் பூஜைகள் பட்டாசு வெடிக்கும் ஆரவாரங்கள் நடக்கின்றன.