Diwali 2023 special sweet: இந்த வருட தீபாவளிக்கு ரொம்பவும் வித்தியாசமான இந்த ஸ்வீட் ஸ்பெஷலா செஞ்சு அசத்துங்க
தீபாவளி என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தீபாவளி பலகாரம் தான். தீபாவளி வந்தால் விதவிதமான பலகாரங்கள் வீட்டில் செய்வார்கள் அதை ரசித்து ருசித்து சாப்பிடலாம் என்றால் எண்ணம் தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் முதலில் வரும. இப்படி பண்டிகை நாட்களில் பலகாரம் என்பது மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது. விதவிதமான ஸ்வீட்களை செய்யா விட்டாலும் காலையில் எழுந்ததும் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் பொழுது ஏதாவது ஒரு ஸ்வீட் அம்மா நமக்காக செய்து வைத்திருப்பார்கள் என்று மகிழ்ச்சியில் தான் குழந்தைகள் வீட்டிற்கு ஓடி வருவர். அப்படி ஓடிவரும் குழந்தைகளுக்காக நீங்கள் விதவித மான பலகாரங்களை அடுக்கி வைக்காவிட்டாலும் ஒரு ஸ்வீட் செய்தாலும் அது வித்தியாசமான ரெசிபியாக செய்தால் அவர்கள் அதனை மிக மகிழ்ச்சியுடன் நினைத்து சாப்பிடுவார்கள்.
வித்தியாசமான முறையில் ஸ்வீட் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு என்ன செய்வது எப்படி செய்வது அப்படியே செய்தாலும் அதற்கு மிக அதிகமான நேரம் செலவாகும் என்று யோசித்துப் புலம்பும் பெண்களுக்கான வித்தியாசமான முறையில் அசத்தும் ருசியில் சூப்பரான ஒரு ஸ்வீட் எப்படி மிக குறைவான நேரத்தில் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கார்ன்பிளவர் மாவு – 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
புட் கலர் – 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன்
முந்திரி – 10
தண்ணீர் – 2 கப்
கார்ன்பிளவர் அல்வா செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கார்ன்பிளவர் மாவு, சர்க்கரை, ஏலக்காய் தூள் , ஃபுட் கலர் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.பின்பு அதனை கடாயில் ஊற்றி எண்ணெய் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கிளறிக் கொண்டே இருக்கும் பொழுது மாவு ஜெல்லி பதத்திற்கு வரும்.அந்த நேரத்தில் நெய் 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் சிறிதளவு, இரண்டாக உடைத்து வைத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.
தற்பொழுது அல்வா பதத்திற்கு வரும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டில் நெய் தடவி அதன் அல்வாவை ஊற்றி ஆரிய பின்பு உங்களது தேவைக்கு ஏற்ப சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து அனைவருக்கும் கொடுத்துப் பாருங்கள் தீபாவளி பண்டிகை தித்திக்கும் கான்பிளவர் அல்வாவுடன் இன்னும் தித்திக்கும் தீபாவளியாக மாறிவிடும்.