சாத்தான்குளம் பற்றி இயக்குனர் வெற்றி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில்
கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதையும் பதிவு செய்யாத வெற்றிமாறன். சாத்தான் குளம் விவகாரம் குறித்து தற்போது பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள்.
நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில் நியாயத்தின் பக்கம் நிற்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உண்மையை தைரியமாக வெளிக்கொண்டுவர சாட்சியளித்த தலைமை காவலர் ரேவதி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளன.
நேரடி சாட்சியாக 19 ஆம் தேதி இரவு காவல் நிலையத்தில் தலைமை காவலர் ரேவதி இருந்திருக்கிறார். சக போலீசாரின் நடவடிக்கைகளால் அதிர்ந்து போயிருந்த இவர். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உறுதியளித்த பின்பு அவர் உண்மைகளை தெரிவித்தார்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெண்ணிஸ் ஆகியோர், அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், என ஒட்டு மொத்த இந்தியாவை இந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வாழ்க்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தான் கேட்ட தரவுகளை தர மறுப்பதாகவும், அந்த விசாரணைக்கு சென்ற போது என்ன நடந்தது என்பது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினார்.
மாஜிஸ்திரேட் பாரதிதாசன் புகாருக்கு பின்னர் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. ஜெயராஜும் பென்னிஸும் விடிய விடிய சாத்தான் குளம் காவல் நிலையத்தில லத்தியால் தாக்கப்பட்டதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உறுதியாக தெரிவித்தார்.