மாஃபியா இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்
இயக்குனர் கார்த்திக் நரேனா!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரியும். அது யாரு இயக்குனர் கார்த்திக் நரேன் அப்படின்னு பலபேர் கேள்வி எழுப்புவது காதுல ஒலிக்குது. திரையுலகத்தின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.
23 ஜூலை 1994-ல் கோயம்புத்தூரில் பிறந்து இருக்காரு கார்த்திக் நரேன். பொறியியல் பட்டப்படிப்பு படிச்சுட்டு இருந்தவரு மூன்றாவது வருடமே படிப்பை விட்டுவிட்டு படத்துக்கு வந்துட்டாரு. குறும்படத்தில் தன்னோட பயணத்தை ஆரம்பித்தாரு கார்த்திக் நரேன்.

குறும் படத்திலேயே பல விருதுகளை தட்டிப் பறித்தார். பிரதி மற்றும் நிறங்கள் 3 இந்த ரெண்டு குறும்படம் பல விருதுகளை வாங்கிச்சு. அப்படியே குறும்படத்திலிருந்து பெரிய படத்துக்கு இறங்க வெள்ளித்திரைக்கு தன் பயணத்தைத் தொடங்கினாரு.
2016ல தான் திரையுலகத்திற்குள் நுழைந்து இருக்காரு. நாலே வருடம் நாலு படம்தான் பண்ணியிருக்காரு அதுல ரெண்டு படம்தான் வெளிவந்து இருக்கு 2020 ல ரெண்டு படம் வெளிவர இருந்தத கொரோனா வந்து கெடுத்துடுச்சு. வெளியான இரண்டு படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க. என்ன படம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா! இதோ பாருங்க.
துருவங்கள் பதினாறு
ரஹ்மான் நடிப்புல புது விதமா கதையை இயக்கி இருப்பாரு கார்த்திக் நரேன். நியோ-நொயர் க்ரைம் த்ரில்லர் படம் என புது வகையில் பட்டைய கிளப்பிய புது இயக்குனராக திரையுலகில் களமிறங்கினார்.
மாஃபியா
அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக வந்ததிலிருந்து மார்க்கெட் டாப்பாக செல்கிறார். மாஃபியா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து ஒரே ஒரு பகுதி மட்டும் வெளியாகி பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் முடிவில் அடுத்த படத்தின் தொடர்ச்சியை பல எதிர்பார்ப்புகளுடன் முடித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
நரகாசுரன்
90ஸ் கிட்ஸின் பெற்றோர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுவரை கதாநாயகனாக நடிக்கும் அரவிந்த்சாமியை வைத்து எடுக்கும் படம் நரகாசுரன். இயக்குனர் கார்த்திக் நரேன் நரகாசுரன் எனும் படத்தின் பெயரைக் கொண்டே பல எதிர்பார்ப்புகளை மக்களின் மத்தியில் எழுப்பியுள்ளார்.

D45
இயக்குனர் கார்த்திக் நரேன் தனுஷுடன் இணைந்து இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றும் காத்திருக்கிறது.
இவ்வாறு நான்கு வருடத்தில் நான்கே படத்தில் திரையுலகை கலக்குகிறார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். 26 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கார்த்திக் நரேனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.