சினிமாசின்னத்திரை

இயக்குனர் மற்றும் நடிகரான பொன்வண்ணனை தெரியுமா!

90ஸ் கிட்ஸிற்கு பொன்வண்ணன் என்ற பெயரை விட அயன் படத்தில் ஏர்போர்ட் அதிகாரியாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வரும். அவருக்கு என்னங்க இப்போ! இன்று இவரின் 56வது பிறந்தநாள்.

பொன்வண்ணன்

23 செப்டம்பர் 1964 ஈரோட்டில் சண்முகமாக பிறந்துள்ளார். ஓவியக் கலைஞராக இருந்தவர் 90ஸில் திரையுலகிற்கு வந்தார். என் இனிய தமிழ் மக்களே என்று கூறி துவங்கிய இயக்குனரின் கீழ் வசன எழுத்தாளராக பணிபுரிய தொடங்கியவர் அவரின் படத்திலேயே துணை கதாபாத்திரத்தில் நடிக்கலானார்.

1991 பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தில் துணை கதாபாத்திரத்தில் திரையுலகில் அறிமுகமானவர் பொன்வண்ணன். அதற்கு அடுத்த வருடமே இயக்குனராக திரையுலகில் களமிறங்கினார். அன்னை வயல் என்னும் இவறின் அறிமுகப் படம் பெரிதாக வரவேற்கப்படவில்லை.

பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவருக்கு இயக்குனராக ஒரு நாடகத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் வரவேற்க படாவிட்டாலும் விருதுகள் பல வந்தடைந்தது. நதிக் கரையினிலே என்ற நாடகம் தேசிய அளவில் திரையரங்குகளில் வெளியிட்டபோது சரியாக வசூல் ஆகவில்லை.

அதனைத் தொடர்ந்து கோமதிநாயகம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். திரையுலகில் பொன்வண்ணன் நடிகராக பெரிதாக வரவேற்கப்பட்டார். பருத்திவீரன் அயன் காவியத்தலைவன் ஆகிய படங்களில் இவருடைய துணை கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது.

1995 மலையாள இயக்குனரின் மகளான சரண்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள். கணவன் மனைவி இருவருமே துணை கதாபாத்திரங்களில் பிச்சு பெடலெடுக்கும் தனித்துவமான நடிகர்கள்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் துணை கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடிக்கும் முன்னணி நடிகர் பொன்வண்ணன். சித்தி சீரியலில் பிள்ளை என்று ஆசையாக அழைக்கும் ஒரு சொல் அனைவருக்கும் மன மகிழ்ச்சியை அளிக்கும்.

56 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் பொன்வண்ணனுக்கு ஆரோக்கியமான உடல் நலத்துடன் சிறந்த திரைப் பயணம் அமைய வாழ்த்துக்களை மக்களின் சார்பாக சிலேட்குச்சி தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *