இயக்குனர் எஸ்.ஜே சூரியா ஹாப்பி பர்த்டே
ஜூலை 20 எஸ்.ஜே சூரியா ஹாப்பி பர்த்டே. எஸ்.ஜே சூர்யா திரைப் பெயர்கொண்ட ஜஸ்டின் செல்வராஜ் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். திரைக்கதை ஆசிரியர் நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக தமிழ் திரைப்படத்துறையில் கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனர் இவர்.
சூர்யாவின் முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து வந்த குஷி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றி அடைந்த போது இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.

பின்பு நியூ,அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின்பு இசை என்ற படத்தை எழுதி இயக்கி இசை அமைத்து நடித்துள்ளார்.
இயற்பியல் பட்டம் பெற்ற இவருக்கு சினிமாவில் நடிகராக வேண்டும் என ஆசை. இதற்காக பல முயற்சிகளை செய்த சூர்யா இயக்குனர் பாக்யராஜ் உதவியாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்கு கிடைக்கின்ற வேலைகளை செய்துள்ளார் சூர்யா.
வாலி, உல்லாசம் போன்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். சிம்ரன், விவேக் என பலர் நடித்த இந்த படத்தில் ஜோதிகாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா தான்.
இதனைத் தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோ, வில்லன் என அவரது நடிப்புக்கு தீனி போட்ட சினிமா இயக்குனர்கள்.
ஸ்பைடர், மெர்சல் படங்களில் இவரின் வில்லத்தனம் சூப்பராக இருக்கும். இறைவி, மான்ஸ்டர் படங்களிலும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

தேவர் மகன் படத்தை பார்த்து திரைக்கதை எப்படி எழுதுவது என்பதை தான் கற்றதாக அவரே தெரிவித்திருந்தார். நாம் எதைக் கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதை ஆழமாக நம்புபவர்.
எஸ் ஜே சூர்யா வாழ்க்கையில் வருகின்ற கஷ்டங்களை எதிர்த்து போராடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது தான் இவரது சக்சஸ் ரகசியமாக குறிப்பிட்டுள்ளார்.