சினிமா

இயக்குனர் பாலாவுக்கு 54 வயசா!

இயக்குனர் பாலாவுக்கு 54 வயசா!

பாலா பழனிச்சாமி பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்.

யார்னு யோசிக்கிறீங்களா நம்ம டைரக்டர் பாலா தான்.

இயக்குனர் பாலா

11 ஜூலை 1966 நம்ம தூங்கா நகரமான மதுரையில் பிறந்து இருக்காரு பாலா. கதாசிரியர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இப்பேர்ப்பட்ட இயக்குனரான பாலுமகேந்திராவிடம் தயாரிப்புக்கு உதவியாளராக பணிபுரிந்தவர் பின்பு அசிஸ்டன்ட் டைரக்டராக பயணத்தைத் தொடங்கினார்.

இயக்குனராக இயக்கிய முதல் படம் சேது. 1999ல் விக்ரமை ‘சியான்’ என்று உலகமே அழைக்க வைத்தவர் இயக்குனர் பாலா. சேது படத்தின் முடிவு மனதை உருக்கும் விதமாக அமைந்திருந்ததால் படத்தை திரையிடும் திரையரங்குகளும் டிஸ்ட்ரிபியூட்டர்களும் சற்று தயங்கினர்.

சேது படத்திற்கு பெரிய விளம்பரம் இல்லாமல் அமைதியாக வெளிப்படுத்தப்பட்டது. விளம்பரமே படுத்தாத இந்த படத்திற்கு மக்களே ஒருவருக்கொருவர் விமர்சனங்களை பகிர இந்தப் படம் பெரிய ஹிட்டை தழுவியது. அதுக்கப்புறம் சியான் விக்ரமுக்கும் நல்ல காலம் பொறந்திருச்சு.

‘யார்ரா இவரு இப்படி படம் பண்றாரு!’ என எல்லாரும் வியந்தனர். முதல் படத்தில் மட்டும் இல்லைங்க இப்ப வரைக்கும் அவர் ஸ்டைலும் ஆளும் மாறவே இல்லை. ஒவ்வொரு படத்திலும் ஒரு புரட்சி செய்து தனித்துவமாக விளங்கினார் இயக்குனர் பாலா.

நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் இவை அனைத்துமே இவரே கதையை எழுதி இயக்கியுள்ளார். இவர் எழுதி இயக்கிய படங்கள் தான் தனித்துவமாக விளங்கியது என்று பார்த்தால் தயாரித்த படங்களும் அட்டகாசமாக விளங்கின.

மாயாவி, பிசாசு, சண்டி வீரன் ஆகியவை இவர் தயாரித்த படங்கள். பரதேசி படத்தில் மட்டும் கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். கணக்கிடக்கூடிய சிறிய அளவில் படம் செய்தாலும் பெரிய அளவில் ஹிட்டான இயக்குனர் பாலா.

6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள், 14 சர்வதேச விழா விருதுகள் மற்றும் ஏராளமான விரும்பத்தக்க மாநில விருதுகள் ஆகியவை திரையுலகில் ஒரு புயலைப் போன்ற விளங்கினார் இயக்குனர் பாலா.

வாழ்த்துக்கள்

இன்ஸ்டாகிராமில் தாரை தப்பட்டை கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலாவிற்கு ‘அவரின் சூறாவளியாக’ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *