இதய வலி நெஞ்சு வலி வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்
சில சமயங்களில் நெஞ்சுவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக் குழாய் பிரச்சனை காரணமாக இருக்கலாம். திடீரென்று நெஞ்சு அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும். அப்படி ஏற்படும் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம். நெஞ்சுவலி முக்கிய அறிகுறியாக இருப்பதால் இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
- நெஞ்சுவலி ஏற்பட இதெல்லாம் காரணம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
- நெஞ்சுவலி முக்கிய அறிகுறியாக இருப்பதால் இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
- நெஞ்சு வலி ஏற்பட காரணம்
நெஞ்சுவலி வந்தால் மாரடைப்பாக இருக்குமோ என்று எண்ணி தேவையில்லாமல் பயந்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நெஞ்சில் ஏற்படும் வலிகளையும் இதய வலியையும் பிரித்துப்பார்க்க தெரிந்துகொண்டால் இந்த பயத்தை தவிர்க்க முடியும்.
நெஞ்சு வலி ஏற்பட காரணம்
வாழைக்காய், உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை இரவில் சாப்பிட்டு காலை எழும்போது ஒருவிதமான நெஞ்சில் வலி தோன்றும். கேஸ் என்று சொல்லப்படுகிறது. இதற்கு இஞ்சி, பூண்டு பேஸ்ட், வாழைக்காய் உருளைக்கிழங்கு சாப்பிடும் போது இந்த பேஸ்ட்டையும், மிளகுத்தூளையும் சேர்த்து சாப்பிடுவதால் இந்த வலியை தவிர்க்க முடியும்.
நெஞ்சுவலி எடுப்பது போன்ற உணர்வு
பரபரப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்பவர்கள் அடிக்கடி நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு தோன்றும். வேகமாக நடக்கும் போதும், மாடிப்படிகளில் ஏறும் போதும், நெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவேண்டும். உடனே சென்று உறங்குவதால் காலை நெஞ்சுவலி எடுப்பது போன்ற உணர்வு சில நேரங்களில் ஏற்படும்.
கொழுப்புச் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது இதன் அறிகுறியாக நெஞ்சு வலி ஏற்படலாம். நம் உண்ணும் உணவு உணவுக் குழாய்க்கு திரும்பும்போது உணவுக்குழாய் பாதிக்கிறது. இரைப்பையில் உள்ள உணவு அமிலத்துடன் உணவுக் குழாய்க்கு திரும்புகிற போது நெஞ்சுக்குழியில் ஏற்படும் வலி ஒருவகை.