ரத்த ஓட்டத்தை சமப்படுத்த ஏற்ற உணவு
ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் புதினா, மிளகு கலந்த தேநீர். ஜீரணத்தை தூண்டி வாந்தி, குமட்டல் நிறுத்தும். வாயை தூய்மையாக்க புதினா கஷாயம் பயன்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு இந்த கஷாயம் பயன்படுகிறது. இந்தியர்களின் உணவில் புதினா ஒரு முக்கிய உணவாக இருந்து வந்திருக்கின்றன. வெப்பமான நாட்களிலும் அதிகம் ஜூஸ் செய்ய புதினா பயன்படுத்தப்படுகிறது.

- ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும். ஜீரணத்தை தூண்டி வாந்தி குமட்டல் நிறுத்தும்.
- இஞ்சியை காலையிலும், சுக்கை மாலையிலும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.
- பூண்டு திசுக்களைப் புதுப்பித்து இரத்தத்தை சரி ஊட்ட கூடியது. திறனேற்றி, திறனூக்கியாக இருக்கிறது.

உணவும் நலமும்
இஞ்சி பச்சையாகவும், உலர்ந்ததாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுக்கு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இன்று வரை செரிமானத்திற்காக, பசியுணர்வை அதிகரிப்பதற்காக தான் இஞ்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இஞ்சி வாய்வு தொல்லையை நீக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. இஞ்சியை காலையிலும், சுக்கை மாலையிலும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.

இளம் நரை குணப்படுத்த
நெல்லியில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் இருக்கின்றன. உப்பு சுவை மட்டுமே இதில் இல்லை. நெல்லி உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஜீரணசக்தி மேம்படுகிறது. ஆரம்ப நிலையிலுள்ள உணவுக்குழல் உபாதைக்கு நெல்லி குணப்படுத்தும் சக்தி கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளன.

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு இது ஏற்ற உணவாக இருக்கும். இளம் வயது வழுக்கை, இளம் நரை, பொடுகு ஆகியவை தொடர்ந்து நெல்லி உண்டுவர நீங்கும். நெல்லிக்காயை பச்சையாகவோ, ஊறுகாய் செய்தோ, நெல்லிக்காய் சாதம் அல்லது ஜூஸ் செய்து எப்படி வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தலைச்சுற்றல் குணப்படுத்த
எலுமிச்சை ரத்தத்தை சுத்திகரிப்பதில் எலுமிச்சை உதவுகிறது. மூட்டுவலி, முடக்குவாதம் ஆகியவற்றை குணப்படுத்தும். நெற்றியில் எலுமிச்சை சாற்றை தேய்க்க தலைச்சுற்றல், மயக்கம் நீங்குகிறது. எலுமிச்சை ஆன்மீக ரீதியாகவும், எலுமிச்சை பல வகைகளில் உதவுகிறது.

சீத பேதி குணப்படுத்த
நாவல் பழம் தொண்டைப்புண், வாய்ப்புண், சீத பேதி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நாவல் மரப்பட்டை வடிநீர் நல்ல மருந்தாகிறது. நாவல் பழமும், விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து.