அல்லுவிடும் அரசியல்! நோட்டாவுக்கு ஓட்டு போட்டா? இனி அவ்வளவுதான்?!
தேர்தல் என்றாலே கட்சியில் ஒரே பரபரப்பு, ஆரவாரமாக இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது. தேர்தல் நடக்கும் போது பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தொகுதியில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பவர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள்.
- தேர்தல் என்றாலே கட்சியில் ஒரே பரபரப்பு, ஆரவாரமாக இருக்கும்.
- அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது.
- நோட்டா முறை கடந்த 6 வருடமாக அறிமுகபடுத்தப்பட்டன.
இந்த நோட்டா முறை கடந்த 6 வருடமாக அறிமுக படுத்தப்பட்டன. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்துக்கு அதிகமான வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகமாக இருந்ததால், அந்த தேர்தலை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
அத்தொகுதி போட்டியிட்ட வேட்பாளர்கள் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. பாஜக மூத்த தலைவர் உச்சநீதிமன்றத்தில் இதனால் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு விசாரணைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஏற்கப்படுமேயானால் கட்சியினர் பலருக்கும் சர்ச்சை அவஸ்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஜனநாயகம் வாழும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன.
வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை
ஆறு மாதத்துக்குள் அந்த தொகுதியில் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிடப்படும். அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட முடியாது. இவ்விதிகள் அமல்படுத்தப்பட்டால் நேர்மையான தேசப்பற்றுள்ள நபர்களை தேர்தலில் நிறுத்தும் நிலை அரசியல் கட்சிகளுக்கு உருவாகும். இதே போல் போட்டியிடும் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை. மக்களின் உண்மையான ஜனநாயகத்தை குறிப்பதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன.