சமையல் குறிப்புவாழ்க்கை முறை

தித்திக்கும் கல்கண்டு பொங்கல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கல்கண்டு வைத்து கல்கண்டு பொங்கல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதை குறைந்தது அரைமணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம். கல்கண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆடி மாதங்களில் அம்மனுக்கு கல்கண்டு பொங்கல் படைத்து வழிபடலாம்.

கல்கண்டு பொங்கல்

தேவையான பொருட்கள் : கால் கிலோ டைமண்ட் கல்கண்டு, அரை கிலோ பச்சரிசி, அரை லிட்டர் பால், நெய் தேவைக்கு ஏற்ப. 10 ஏலக்காய் பொடி செய்தது, முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 10 கிராம், 100 கிராம் பாசிப்பருப்பு.

செய்முறை :

ஸ்டெப் 1 பருப்பையும், அரிசியையும் அரைமணி நேரம் அலசி ஊறவைத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். 2) குக்கரில் கழுவிய பருப்பு அரிசி பால் மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.

3) முந்திரி பருப்பு, திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து எடுத்து வைத்து விடவும். 4) வெந்த சாதத்தை நன்றாக மசித்துக் கல்கண்டு சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கிளறி இறக்கவும்.

5) கல்கண்டு சாதம் நன்றாக கலந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொங்கலில் சேர்த்து இறுதியாக ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

அரிசி வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்துக் கொள்வதால் சுவை கூடுதலாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *