ரஃபேல் விமானம் இந்தியாவுடன் இணைபு தோனி பெருமிதம்
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று சேர்க்கப்பட்டது. இதுகுறித்து பெருமிதம் கொண்டு பரவசமடைந்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார் தோனி. முன்னாள் கேப்டன் லெப்டினன்ட் கர்னல் தோனி அவர்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றார்.
உலகத்தின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என நிரூபிக்கப்பட்ட ஒன்று இந்திய விமானப் படையுடன் இணைந்து இருக்கின்றது. இது இந்தியாவிற்கு பெருமை இந்தியாவின் பாதுகாப்பு படைக்குப் பெருமை, இந்திய விமானப் படையுடன் இணைந்து இருப்பதன் மூலம் இந்தியா இன்னும் ஒரு படி மேல் தனது பலத்தை நிரூபிக்க முக்கிய வாய்ப்பாக இருக்கும்.
சிறந்த போர் விமானங்களுக்கு உலகின் சிறந்த போர் விமானங்கள் கிடைத்திருக்கின்றன. நமது பாதுகாப்பு திறன் இன்னும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியிட்டிருந்தார். தோனி தனது ட்விட்டர் செய்தியில் விமானப்படையின் பதிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை தெரிவித்திருக்கின்றார்.
மிராஜ் 2000 போர் விமானங்கள் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் இருந்தது. அதனை முறியடிக்கும் வகையில் ரஃபேல் ரக போர் விமானங்கள் இருக்கும் என்று தோனி கூறினார். மேலும் தோனி தனக்குப் பிடித்தது சுகோய் 30 எனவும் தனது வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
தோனியை போல இந்தியாவில் என்று பாதுகாப்பு படையை பார்த்துப் பரவசத்தில் இருக்கின்றது. ரஃபேல் இணைப்பு பாதுகாப்பு படைக்கு இன்னொரு அம்சமாகும். இது மேலும் நம்மை வலுவாக்கும் விதத்தில் இருக்கின்றது. இது நாட்டிற்கு நல்ல தருணத்தைக் கொடுக்கும் இதன் மூலம் இந்தியாவிற்கு பலம் அதிகரிக்கும். இந்தியா தொடர்ந்து தனது வலிமையை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஃபேல் விமானங்கள் மீதம் இருப்பதை அடுத்து வரும் நாட்களில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது தற்போது ஐந்து ரகங்கள் இந்தியாவின் விமானப் படையுடன் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.