சாகசங்கள் ஏராளம் செய்து கேப்டன் கூல் பட்டத்தை வென்றவர் ரியல் கிங் தோனி
ஒரு கிரிக்கெட் வீரராக தோனியின் திறமை குறித்து பேச ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. வெற்றியின் போதும், தோல்விகளின் போதும் அலட்டிக்கொள்ளாத தோனியின் பண்பு, பலரின் ஈர்ப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.
சாகசங்கள் ஏராளம்
பல முன்னணி வீரர்கள் பலமுறை சொல்லியிருக்கின்றனர். டோனியை விட சிறந்த பினிஷர் உலகில் இல்லை. விக்கெட் கீப்பிங் பொருத்தவரை சர்வதேச தரம் கொண்ட ஒருவர் என்று தோனி இறுதிவரை இடம்பிடித்துள்ளார். தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் கை பார்த்து கிறங்கியவர்கள் உண்டு. ஸ்டம்பை பார்க்காமலே அவர் ரன் அவுட் செய்த சாகசங்கள் ஏராளம் இதை மறக்க முடியாது பலரால் என்று சொல்லலாம்.
வெற்றி மேல் வெற்றி
தன்னை வளர்த்துவிட்ட கங்குலியை இவரது இறுதிப்போட்டியில் கேப்டனாக மாற்றி அழகு பார்த்தது யாராலும் மறக்கவே முடியாது. டோனியின் பிட்னஸ்க்கு ஈடாக இன்றைய இளைஞர்களால் ஈடுகொடுக்க முடியாது. ஒரு கேப்டனாக ஐசிசி நடத்திய 3 சர்வதேச கோப்பைகளையும் வென்று வெற்றி மேல் வெற்றிகளை குவித்து உள்ள தோனி திறமைகளையும், வெற்றிகளையும் மட்டுமே கொண்டுள்ளதால் தோனியை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று சொல்ல முடியாது.
அணுகுமுறை
ஜென்டில்மேன் அணுகுமுறை என்றுதான் சொல்லவேண்டும். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி என்று நடந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுவரை ஜென்டில்மேன் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டு. கிரிக்கெட் என்பது எப்போதும் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்றுதான் சொல்வார்கள். இதை புரிந்து கொண்டு விளையாடிய வீரர்கள் மிகவும் சொற்பமானவர்களாக தான் இருப்பார்கள்.
வீரர்களின் பட்டியலில்
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டாக கையாண்ட வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிக முக்கியமான இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணியில் சக வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம். எதிரணி வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம். நடுவர்கள் ரசிகர்கள் என ஒவ்வொரு தருணத்தையும் ஒரு வீரன் எப்படி தன்னுடைய அணுகுமுறையை நடத்தை பண்பை வெளிப்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அந்த வீரர் எந்த அளவு ஜென்டில்மேனாக இருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.
கோடிக்கணக்கான ஃபேன்
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தனிப்பட்ட வீரர்களை விட ஒரு கேப்டனுக்கு இந்த அணுகுமுறை மிகவும் தேவையாக கருதப்படுகிறது. தோனி அளவு நாடு கடந்து கோடிக்கணக்கானவர்கள் இவருக்கு ஃபேன் ஆக இருக்கிறார்கள். யாரும் நினைக்க முடியாத அளவிற்கு தோனியின் பக்குவமான அணுகுமுறை களத்தில் நாம் பார்க்க முடியும். வெற்றி தோல்வி என மிகைப்படுத்த உணர்வுகளை வெளிப்படுத்தியவர்.
டோனி எடுத்த முடிவு உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறையாக இருந்தது. தோனி கேப்டன் கூல் என்ற பட்டம் இவ்வளவு எளிதில் தோனிக்கு கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு தலைமை தாங்கிய தோனி இவர் வெற்றியின் உச்சத்திற்கு சென்று இதுவரை செய்ய முடியாத சாதனைகளை படைத்து பல்வேறு சவால்களையும் சந்தித்து இருக்கிறார்.