செய்திகள்விளையாட்டு

கொடுமையிலும் கொடுமை தோனிக்கு முதிர்ச்சியற்ற ரசிகர்கள்

டோனியின் மகளுக்கு பாலியல் கருத்துக்களை கொடுத்து கொச்சைப் படுத்தி இருக்கின்றனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது,

  • விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி என்பது இருக்கத்தான் செய்யும்.
  • அணியின் வீர்ர்களை காயப்படுத்துதல் மற்றும் அணியின் குடும்பத்தாரை காயப்படுத்துவது என்பது மிகவும் கேவலமான ஒரு தன்மையாகும்.
  • சிஎஸ்கேவின் தோல்விக்கு ரசிகர் செய்த கேவலமான நடத்தை தண்டனைகுரியது ஆகும்.

குழந்தை என்றுகூட பாராமல் பேசலாமா

தோனியின் குழந்தை பச்சை இளம்பிள்ளை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத சில ஜென்மங்கள் செய்யும் இந்த அர்த்தமற்ற நடவடிக்கைகளால் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம்தானே

விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி இருக்கத்தான் செய்யும். அதிக எதிர்பார்ப்பு என்பது பார்வையாளருக்கு இருப்பது அவர்களுடைய தவறு அதற்காக விளையாட்டு வீரரைத் திட்டுவது தவறு, இதில் அவரது குடும்பத்தாரை காயப்படுத்துவது உச்சகட்ட தவறு. அதுவும் ஐபிஎல்லில் தொடர் 5 முறை சென்னை அணி தோற்றது அதற்காக ரசிகர்களின் பொறுப்பற்ற பேச்சு,

மேலும் அதுவும் பெண் பிள்ளைக்கு இதை வைத்துப் பாலியல் கருத்துக்கள் பரப்புவது கொடூர தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து காவல்த்துறை விசாரித்து வருகின்றது. ஆனால் இப்படியுமா ரசிகர்கள் இருப்பார்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது இது போன்ற கேடு கெட்ட செயல்களைச் செய்த மனித ஜென்மங்களை கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

தண்டனையே சிறந்தது

அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையை அடுத்து இதுபோன்று ரசிகர்கள் நடக்ககூடாது. அடுத்தவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொண்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

தோல்விக்கு பேசும் பேச்சா இது

பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் இல்லை என்ற ஆய்வு விவரங்களும் தெரிவித்து வருகின்றன. இது தாய் பிறந்த தேசம் என்ற அடிப்படைக் கருத்து கூட தெரியாத அசமந்தமாகப் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த அதிவேக டிஜிட்டல் உலகில் கட்டற்ற வாழ்வியல் முறையில் மக்கள் நகர்ந்து வருகின்றனர் எதற்காகப் பின்னாளில் நாம் வருந்த வேண்டி இருக்கும் இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *