சினிமாசின்னத்திரை

தனுஷுடன் நடித்து தனுஷாகவே மாறும் தீனா

ப. பாண்டி படத்தில் தனுஷிற்கு நண்பனாக வரும் விஜய் தொலைக்காட்சி புகழ் தீனா, தனுஷ் படத்தில் வரும் கதாபாத்திரங்களாக போட்டோ ஷூட் மூலமாக மாறியுள்ளார். அசுரன் ஆடுகளம் போன்ற சூப்பர் ஹிட் தனுஷ் படங்களில் தனுஷின் கதாபாத்திரத்தை தீனாவை கொண்டு ரீ-கிரியேட் செய்துள்ளனர்.

  • விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கியவர் தீனா.
  • சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகைச்சுவை நாயகனாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
  • ப. பாண்டி கைதி போன்ற படங்களில் கதாநாயகனுக்கு தோழன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
  • நடிகர் தனுஷ் உடல் கட்டை போலவே தீனாவின் உடல் கட்டும் இருக்க பிரமாதமான ரீக்கிரேஷன் செய்யப்பட்டுள்ளார்.

தீனா

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் தீனா. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி குடும்பத்தினராக மாறினார்.

மேலும் படிக்க : திருடிய இதயத்தை திருப்பி… பார்வை ஒன்று போதுமே

தீனாவின் குசும்பு

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களையும் தொகுப்பாளர்களையும் வார்த்தை ஜாலத்தால் விழி பிதுங்கி நிற்க வைத்து விடுவார்.

ப. பாண்டி

ப. பாண்டி படத்தில் தனுஷ், மடோனா செபாஸ்டியன், ராஜ்கிரண், ரேவதி பிரசன்னா, சாயாசிங், வித்யூலேகா என பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் தீனா. ராஜ்கிரனின் இளைய வயது காலத்தை தனுஷ் நடிக்க தனுஷுக்கு தோழனாக நடித்திருந்தார் தீனா.

கைதி

கார்த்தி சிவகுமாரின் நடிப்பில் பட்டையைக் கிளப்பிய படம் கைதி. லாரி ஓட்டுனராக குற்றவாளியாக ஒரு குழந்தையின் தந்தையாக நடித்திருந்த கார்த்தியுடன் அந்த லாரிக்கு சொந்தக்காரராகவும் வழிகாட்டியாகவும் கிளீனராகவும் நடித்திருந்தார் தீனா. விருவிருப்பாக இருக்கும் படத்திலும் சிரிக்க வைக்கும் வார்த்தை ஜாலம் கொண்டவர்.

அசுரன் ஆடுகளம்

தனுஷை போலவே மெலிந்த உடல் கட்டுடன் இருக்கும் தீனாவிற்கு தனுஷின் கெட்டப்புகள் கனக்கச்சிதமாக பொருந்துகிறது.

அசுரன் சிவசாமி மற்றும் ஆடுகளம் கருப்புவாக உருவெடுக்கும் தீனா.

தீனா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இந்தப் பணியில் இறங்கிய அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : நடிகை அவந்திகா மிஸ்ராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *